Dindigul

News March 8, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.07) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 7, 2026

திண்டுக்கல்லில் உள்ள பெற்றோர் கவனத்திற்கு!

image

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <>இந்த லிங்கை<<>> க்ளிக் செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க!

News March 7, 2026

திண்டுக்கல்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377 2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500 3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090 4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098 5. முதியோருக்கான அவசர உதவி : 1253 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News March 7, 2026

திண்டுக்கல்: UPI மூலம் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News March 7, 2026

திண்டுக்கல்: திடீர் கரண்ட் கட்? இனி Whatsapp மூலம் தீர்வு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், திடீர் கரண்ட் கட் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்க இந்த 94431 11912 எண்ணிற்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். மேலும் அவசர உதவிக்கு – 94987 94987 இந்த எண்ணிலும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News March 7, 2026

ஒட்டன்சத்திரம்: தட்டித்தூக்கிய அமைச்சர்!

image

ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த பல்வேறு மாற்றுக்கட்சியினர் தங்களது கட்சிகளிலிருந்து விலகி, திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது. அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில், அவர்கள் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். கட்சியில் இணைந்தவர்களை அமைச்சர் சக்கரபாணி சால்வை அணிவித்து வாழ்த்தி வரவேற்றார்.

News March 7, 2026

கொடைக்கானல்: அடையாளம் தெரியாத எலும்புக்கூடு

image

கொடைக்கானல் கங்கா காம்பவுண்ட் பகுதியில் ஏரிச்சாலையில் இருந்து நீர் வெளியேறும் இடத்தில் பேண்ட் அணிந்த நிலையில் மனித எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓடு கிடந்தது. தகவலறிந்து வந்த கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார் அவற்றை கைப்பற்றி ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 7, 2026

நத்தம் அருகே சோகம்; பெண் பலி

image

நத்தம் அருகே கவரயபட்டியை சேர்ந்தவர் அடைக்கம்மாள் (55). இவர் சம்பவத்தன்று தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக வரப்பில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கால் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அடைக்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 7, 2026

அறித்தார் திண்டுக்கல் கலெக்டர்! GOOD NEWS

image

திண்டுக்கல் நத்தம் ரோடு குள்ளனம்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 09.03.2026 அன்று தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. அரசு, தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு பயிற்சியாளர்களை தேர்வு செய்ய உள்ளன. தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.10,560 முதல் ரூ.12,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். 8, 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News March 7, 2026

திண்டுக்கல்லில் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் ஆய்வு!

image

திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், 14-15 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு எச்.பி.வி தடுப்பூசி வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சியர் சரவணன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இம்முகாமில், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முஹம்மது பாசில், மாநகர் நல அலுவலர் ராம்குமார் மற்றும் மாவட்ட தாய்சேய் நல அலுவலர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மருத்துவ துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!