India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டுக்கல், நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நத்தம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து வருகின்றனர். இந்நிலையில் பக்தர்களிடம் நகை திருட்டில் ஈடுபட்ட நிலக்கோட்டையை சேர்ந்த வள்ளி, விராலிமலையை சேர்ந்த செல்லத்துரை ஆகிய இருவரையும் நத்தம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தடுக்கும் பொருட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் 10,11 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்து காவல்துறை உத்தரவு
கொட்டாம்பட்டியிலிருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் சமுத்திராபட்டி சோதனைசாவடி வழியாக சிறுகுடி,பாப்பாபட்டி பிரிவு,பாதசிறுகுடி,சேர்வீடு பிரிவு வழியாக திண்டுக்கல் செல்லவும். இது குறித்தான வரைபடம் மேலே வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 9) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர நிலை ஏற்பட்டால் தங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் (TANSI) நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

திண்டுக்கல் மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<

அதிமுக மகளிரணி சார்பில் நத்தம் ரோடு கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், மகளிர் உரிமைத்தொகையை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழித்து தான் வழங்கினார். தற்போது கட்சி ஆரம்பித்த நடிகர் விஜய் தேர்தலுக்காக புதிய வாக்குறுதிகளை வெளியிடுகிறார் அதையெல்லாம் நீங்கள் நம்ப வேண்டாம்.தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார்

பழனி அருகே ஆயக்குடி பகுதியில் உள்ள சின்னாம்பாறையில் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இருந்து சிறுவனின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் ஆலோசனையின்படி, திண்டுக்கல் – தேனி புறவழிச்சாலையில் உள்ள அனுமந்தராயன் கோட்டையில் 5 ஏக்கரில் ‘மினி டைடல் பார்க்’ அமைக்கப்படும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவித்துள்ளார். இதனால் திண்டுக்கல், தேனி மாவட்ட இளைஞர்கள் வேலைக்காக சென்னை, கோவை செல்ல வேண்டிய அவசியமிருக்காது. இதற்கான டெண்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.