Dindigul

News March 5, 2026

திண்டுக்கல்: டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

image

திண்டுக்கல் மக்களே, இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58,514 சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, இந்தத் தகவலை டிகிரி முடித்த அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

News March 5, 2026

திண்டுக்கல் மக்களே., உங்க PHONE-ல் இந்த எண்கள் இருக்கிறதா?

image

திண்டுக்கல் மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்க
1. திண்டுக்கல் – 0451-2427304
2. பழனி – 04545-242266
3. ஒட்டன்சத்திரம் – 04553-241100
4. வேடசந்தூர் – 04551-260224
5. நத்தம் – 04544-244452
6. நிலக்கோட்டை – 04543-233631
7. கொடைக்கானல் – 04542-240243
8. ஆத்தூர் – 0451-2556212
இதனை SHARE IT

News March 5, 2026

திண்டுக்கல்: தட்டித்தூக்கிய அமைச்சர்

image

திண்டுக்கல், N.பஞ்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் இமாக்குலின் ஷர்மி. இவர் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய துணை சேர்மனும் ஓ. பன்னீர்செல்வம் தீவிர ஆதரவாளர். இந்நிலையில் நேற்று மாலை திமுக கட்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை நேரில் சந்தித்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

News March 5, 2026

திண்டுக்கல்லில் பரபரப்பு; கத்திக்குத்து சம்பவம்!

image

திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியில் கொத்தனார் வேளாங்கண்ணி (39) மற்றும் கிஷோர்வசந்த் (21) இடையே குடிபோதையால் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த கிஷோர்வசந்த், 17 வயது சிறுவன் ஆகிய இருவர் வேளாங்கண்ணியை கத்தியால் வெட்டினர். இதில் காயமடைந்த வேளாங்கண்ணி சிகிச்சைக்காக திண்டுக்கல் GH-ல் சேர்க்கப்பட்டார். நகர் தெற்கு போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 5, 2026

பழனி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

பழனியை அடுத்த ஆயக்குடியை சேர்ந்த கருப்புசாமி (33). இவர், குடும்ப பிரச்சினை காரணமாக மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் யாரும் இல்லாதபோது கருப்புசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த ஆயக்குடி போலீசார் கருப்புசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி GH-க்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிகின்றனர்.

News March 5, 2026

சிசிடிவி கேமிரா பொருத்த காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றத் தடுப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இணையதளம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. “காவல்துறையின் மூன்றாம் கண் – சிசிடிவி கேமிரா பொருத்துவோம், பாதுகாப்பாக இருப்போம்” என்ற வாசகத்துடன் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் நிறுவனங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 4, 2026

திண்டுக்கல்லில் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (மார்.04) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 4, 2026

திண்டுக்கல்: கேஸ் பில்லை விட அதிக பணமா?

image

திண்டுக்கல் மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News March 4, 2026

திண்டுக்கல்: அரசின் குறைந்த விலையில் சொந்த வீடு! APPLY

image

திண்டுக்கல் மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து பெயர், மொபைல் எண், சான்றிதழ்கள், ஆண்டு வருமானம் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 4, 2026

திண்டுக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக் <<>>(அ ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!