India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தில் 23 குழந்தைகள் பிறந்தனர்.திண்டுக்கல்லில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு புத்தாண்டு பிறந்த நள்ளிரவு 12 மணி முதல் நேற்று மாலை 6 மணி வரை திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 23 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் குழந்தைகள் 11 பெண் குழந்தைகள் அடங்கும்.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு அருகே உள்ள அடியனூத்து, பாலகிருஷ்ணாபுரம், செட்டிநாயக்கன்பட்டி, குரும்பபட்டி, முள்ளிப்பாடி, பள்ளப்பட்டி, சீலப்பாடி, தோட்டனூத்து ஆகிய ஊராட்சிகளில் குடியிருப்புகளும், மக்கள் தொகையும் அதிகமாக உள்ளது. மேலும் இவ்வூராட்சிகளில் பெரும்பான்மையினர் வேளாண்மையில்லாத தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். எனவே, மேற்குறிப்பிட்டுள்ள 8 கிராம ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சத்திரப்பட்டி சுங்கச்சாவடியில், கேரளா பாலக்காட்டில் இருந்து மீன், கோழி, நண்டு உள்ளிட்ட மாமிச கழிவுகளை தூத்துக்குடி செல்வதற்காக ஏற்றி வந்த கண்டைனர் லாரியை, சத்திரப்பட்டி காவல்துறையினர் சிறைப்பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இன்று (01-01-2025) இரவு 11.00 மணி முதல் நாளை வியாழக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் A.வெள்ளோடு, கோம்பை அருகே ஆணை விழுந்தான் அணையில் இன்று நீரில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், சிறுவனின் உடலை மீட்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் உடலை மீட்கும் பணி நாளை காலை மீண்டும் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு பண்டிகையில் பழனி தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய, பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். இது தவிர சபரிமலை ஐயப்ப பக்தர்கள், பாத யாத்திரை பக்தர்கள் திரண்டதால் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவியது. இந்நிலையில் இன்று பழனி கோவிலுக்கு வந்த மதுரையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 30 அடி நீள அலகு குத்தி வந்தார்.
ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திமுக துணை பொதுச்செயலாளரும், அமைச்சருமான இ,பெரியசாமியிடம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அமைச்சருக்கு பொதுமக்கள், கட்சியினர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
திண்டுக்கல் அருகே உள்ள வேடசந்தூரில் இன்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மட்டன் சிக்கன் மீன் போன்ற வகைகளை வாங்க கூட்டமாக மக்கள் குவிந்தனர். இன்று ஒரு கிலோ மட்டன் எலும்பில்லாமல் ரூபாய் ஆயிரம் ரூபாய்க்கும், சிக்கன் எலும்பில்லாமல் ரூபாய் 250ரூபாய்க்கு விற்பனை. வஞ்சிரம் மீன் கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனை, கிழங்கான் மீன் கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை, நெத்திலி மீன் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தாடிக்கொம்பு அருகே காப்பிளியபட்டி காலனி பகுதியை சேர்ந்த மதுரை வீரன் மகன் காளீஸ்வரன்(21) கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாடிக்கொம்பு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் போலீசார் காளீஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழனி பெரியவுடையார் கோவில் அருகில் உள்ள குளத்தில் பெத்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்த நபர் மூழ்கி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், குளத்தில் மூழ்கிக் கிடந்த நபரை மீட்டனர். இது குறித்து பழனி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.