India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டம் நீலமலைக்கோட்டை, மேற்கு தொடர்ச்சி அடிவார மலைப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் யானைகள் உள்ளே புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, இன்று நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் யானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகளிடம் உறுதி அளித்து, ஆறுதல் கூறினார்.
கொடைக்கானல் வரும் பயணிகள் 5 கி. மீ. சுற்றளவில் உள்ள ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்வது வழக்கம். நகராட்சி, தமிழ்நாடு சுற்றுலாத்துறை மிதிபடகு, துடுப்பு படகுகளை இயக்குகின்றனர். பாதுகாப்பு கருதி லைப் ஜாக்கெட் வழங்கப்படுகிறது. லைப் ஜாக்கெட் அணியாமல் படகில் நின்று நடனம், செல்பி போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். இது போன்ற செயலால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க குடும்ப அட்டைதாரர்களுக்கு, டோக்கன்கள் இன்று (டிச.3) முதல் வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்புகள் பெறுவதில் புகார்கள், குறைபாடுகள் ஏதேனும் இருப்பின், அதனை திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி 0451-2460097 என்ற எண்ணிற்கு புகார்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இன்று 02-01-2025 இரவு 11.00 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் வேன் சக்கரம் முறிந்து இன்று விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பள்ளி மாணவர்கள் உயிர்த்தப்பினர். வேன் சக்கரம் முறிந்ததில் சுமார் 25 அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டது. இச்சம்பவத்தின் போது மற்ற வாகனங்கள் வராததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC Group-II மற்றும் IIA முதன்மை தேர்வுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC Group-II மற்றும் IIA முதன்மை தேர்வுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல், எ.வெள்ளோடு அருகே கோம்பை ஆனை விழுந்தான் அணையில், நேற்று மூழ்கிய கல்லூரி மாணவன் வில்சன்ஜெரோம் உடலை 2-வது நாளாக 30 பேர் கொண்ட தீயணைப்புபடை வீரர்கள் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வில்சன்ஜெரோம்-ன் உடலை மீட்டனர். அம்பாத்துரை போலீசார் வில்சன்ஜெரோமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நத்தம் அருகே புதுப்பட்டி-குமரப்பட்டி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் கேரளாவில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் மோதியதில் 2 பேர் பலியானர்.மேலும் 6 பேர் காயம் அடைந்த நிலையில் காயமடைந்தவர்கள் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஏ.வெள்ளோடு அருகே உள்ள கோம்பை ஆனை விழுந்தான் அணையில், நேற்று தண்ணீரில் மூழ்கிய கல்லூரி மாணவனின் உடலை இன்று 2-வது நாளாக சுமார் 30 தீயணைப்பு படையினர் கொண்ட குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தண்ணீரின் அடர்த்தி அதிகம் மற்றும் முட் புதர்கள் நிறைந்து இருப்பதால் தேடுவதில் சற்று சிரமம் நீடித்து வருகிறது. இவர் கோயம்புத்தூரில் குமரகுரு இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
Sorry, no posts matched your criteria.