India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வை படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (இலவச Wi-Fi, பயன்படுத்தி பண பரிவர்த்தனை மேற்கொள்வதை தவிர்க்கவும், இலவச Wi-Fi, மூலம் உங்கள் செல்போன் கண்காணிக்கப்படலாம் எச்சரிக்கை) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை இன்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு மொத்த வாக்காளர் 19 லட்சத்து 15 ஆயிரத்து 564 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 9 லட்சத்து 29 ஆயிரத்து 70, பெண்கள் 9 லட்சத்து 85 ஆயிரத்து 625, மற்றவர்கள் 233 வாக்காளர்கள் உள்ளனர். இதை இன்று கலெக்டர் பூங்கொடி வெளியிட்டார். திண்டுக்கல்லில் பெண் வாக்காளர்கள் தான் அதிகம்.
திண்டுக்கல் அருகே குட்டியப்பட்டியில் கிளிமூக்கு, விசிறிவால் சேவல் கண்காட்சி 10வது ஆண்டாக நேற்று நடைபெற்றது. கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களைச்சேர்ந்த சேவல்கள் கலந்து ஷோரூம் கொண்டன. இதில் மணப்பாறையை சேர்ந்த ரங்கராஜன் கொண்டு வந்த கிளிமூக்கு சேவல் ரூ.7 லட்சத்திற்கு விலை பேசப்பட்டது. ஆனாலும், அதன் உரிமையாளர் அதனை விற்கமுடியாது என மறுப்பு தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் இன்று 05-01-2025 இரவு 11.00 மணி முதல் நாளை சனிக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது..
திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.ஏ திருமண மண்டபத்தில், லயன் இன்டர்நேஷனல் ராணி வேலு நாச்சியார் மண்டல சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் நசுருதின் மற்றும் மாவட்ட ஆளுநர் சசிகுமார் தலைமை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தனியார் தொலைகாட்சி புகழ் ஈரோடு மகேஷ் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். இந்நிகழ்வில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
24 மணி நேரமும் மதுக்கூடம் செயல்படுவதாக குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்ட, பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் மதுக்கூடத்துக்குள் அத்துமீறி நுழைந்து பணியாளரை மிரட்டியதாக 5 பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கொடைக்கானல் சென்றுவிட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்த பாஜக நிர்வாகி கனகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகம் வெளியிட்ட செய்தி: அனைத்து மூலப் பொருள்களையும் கலவை செய்து, 80 டிகிரி வெப்ப நிலையில் கொதிக்கவைத்து பஞ்சாமிா்தம் தயாா் செய்யப்படுகிறது. பெரிய அளவிலான பச்சையான கரும்புச் சக்கை இருந்ததற்கு வாய்ப்பே இல்லை. திட்டமிட்டு பொய்யான செய்திகள் வெளியிடப்படுகின்றன. கடந்த ஆண்டும் இதேபோல, பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டன. பொய்யான செய்தியை பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பயணத்தின் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்கவும்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை, திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக, சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன்(54). இவரது மனைவி தனலட்சுமி(47). இருவரும் கடன் பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த நிலையில், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அக்கம் பக்கத்தினர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டையொட்டி தயாரிக்கப்பட்ட அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு – பழனி 2024 சிறப்பு மலரினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சிறப்பு மலரை தலைமை செயலகத்தில் நேற்று தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்துசமய அறநிலையத்துறைஅமைச்சர் பி.கே.சேகர்பாபு, திருவண்ணாமலை ஆதினம் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.