Dindigul

News January 10, 2025

பழனி: சீமான் மீது போலீசில் புகார்

image

பழனி நகர காவல் நிலையத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமியை இழிவுபடுத்தியதாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது திராவிட கழகத்தினர் புகார் அளித்தனர். மாவட்டத் தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் பொன்.அருண்குமார், திராவிட செல்வன் ஆகியோர் புகார் மனு அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்வதாக உறுதியளித்தனர்.

News January 10, 2025

திண்டுக்கல்: அரசு பஸ் மோதி மாணவன் உயிரிழப்பு

image

வேடசந்தூர் அருகே நேற்று இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிற்பயிற்சி நிலைய மாணவா் உயிரிழந்தாா். வேடசந்தூா் நாகம்பட்டி பகுதியில் சென்றபோது, போடியிலிருந்து சேலத்துக்குச் சென்ற அரசுப் பேருந்து இவர்களது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் கோகுலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த தருண், எட்வின் சகாயராஜ் ஆகியோா் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

News January 10, 2025

திண்டுக்கல் மாணவர்கள் தேசிய தடகள போட்டிக்கு தேர்வு

image

சென்னை திருத்தணியில் பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டி நடந்தது. 14 வயது பிரிவில் அச்யுதா பப்ளிக் பள்ளி 9ம் வகுப்பு மாணவன் சர்வேஷ் தேர்வு செய்யப்பட்டார். இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் நடக்கவுள்ள தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார். ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த சவுத் சூன் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் அச்யுதா பப்ளிக் பள்ளி 10ம் வகுப்பு மாணவி கீர்திகா ராஜன் 2ம் இடம் பெற்றார்.

News January 10, 2025

திண்டுக்கல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

திண்டுக்கல் மாவட்டத்தில் 144 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து மது பான பார்களும் உள்ளன. இவை அனைத்துக்கும் வருகிற 15ம் தேதி (திருவள்ளுவர் தினம்), 26ம் தேதி (குடியரசு தினம்) ஆகிய 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. மீறி மதுபானங்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பூங்கொடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News January 10, 2025

திண்டுக்கல் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

திண்டுக்கல்லில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்.➢ வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயில், வைகுண்ட ஏகாதசி விழா சொர்க்க வாசல் திறப்பு, காலை 5:30 மணி, சுவாமி ஊர்வலம், காலை 7:30 மணி.. ➢ காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் வாழ்நாள் கல்வித்துறை மற்றும் சுகுணா மோட்டார்ஸ் கோயம்புத்தூர் இணைந்து நடத்தும் இருசக்கர வாகனம் சார்ந்த வேலைவாய்ப்பு முகாம். ➢ மார்கழி திருவிளக்கு பூஜை, கோட்டை மாரியம்மன் கோவில்

News January 9, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம் 

image

திண்டுக்கல்லில் இன்று (10-01-2025) இரவு 11.00 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

News January 9, 2025

பைக் மீது அரசு பேருந்து மோதி மாணவர் உயிரிழப்பு 

image

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு புறநகர் பேருந்து மோதி இன்று விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இரண்டு மாணவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 9, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவுரை 

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்போம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம், திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக, சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News January 9, 2025

துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் 

image

தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பரிசுத்த வகுப்பு அனைத்து நியாயங்களை கடைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை, மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி, செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள வேலுநாச்சியார் வளாக குடியிருப்பு நியாயவிலைக் கடையில் தொடங்கி வைத்தார்.

News January 9, 2025

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் 15.01.2025 (புதன்கிழமை) திருவள்ளுவர் தினம் மற்றும் 26.01.2025(ஞாயிற்றுக்கிழமை) குடியரசு தினம் ஆகிய நாட்களில் மூடப்பட்டிருக்கும். அன்றைய தினங்களில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!