Dindigul

News January 26, 2025

திண்டுக்கல்லில் இன்றைய நிகழ்வுகள்

image

திண்டுக்கல்லில் இன்று (26.01.2025) முக்கிய நிகழ்வுகள். ➢திண்டுக்கல்லில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. ➢ இந்திய நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. ➢ நத்தம் அரசு மருத்துவமனையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இரத்ததானக் கழகம் நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெறுகிறது.

News January 26, 2025

திண்டுக்கல்லில் விடுமுறைக்கு இங்கு போங்க!

image

இன்று ஜன.26ஆம் தேதி குடியரசு தினம் அரசு விடுமுறை. இந்த விடுமுறையை நீங்க திண்டுக்கல் மாவட்டத்தில் கொண்டாட பல்வேறு இடங்களுக்கு செல்லலாம். மினி கொடைக்கானல் என அழைக்கப்படும் சிறுமலை திண்டுக்கல்லின் முக்கிய சுற்றுலாத் தளமாகும். இங்கு செல்ல 18 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். சிறுமலையில் வாழைப்பழம் மிகவும் புகழ்பெற்றது. இந்த விடுமுறையை நீங்க இங்க ஜாலியாக கொண்டாடலாம்.

News January 25, 2025

திண்டுக்கல் மக்களே! உங்கள் ஊர் செய்திகளை பதிவிடுங்கள்

image

நாளை (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் ஊரில் கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்ச்சிகளும், நடைபெற உள்ளன. இந்த நிகழ்வுகளை வே2நியூஸில் பதிவிட்டு, உங்கள் ஊர் செய்திகளை அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். எப்படி அனுப்புவது என்று தெரியலையா? இந்த லிங்கை க்ளிக் பண்ணுங்க.

News January 25, 2025

திண்டுக்கல்லில் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல்லில் இன்று 25-01-2025 இரவு 11.00 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது…

News January 25, 2025

சிறுதானிய உணவுத் திருவிழா

image

திண்டுக்கல் மாவட்டம்மாவட்ட மற்றும் மாநில அளவிலான சிறுதானிய உணவுத் திருவிழா 29.01.2025 அன்று நடைபெறவுள்ளது. எனவே, மாநில அளவிலான சிறுதானிய உணவுகள் குறித்த கண்காட்சியினை பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் பார்வையிட்டு, விழாவில் கலந்து கொண்டு சிறுதானியங்களின் பயன்பாடு மற்றும் சிறப்புகளை தெரிந்துகொண்டு பயன்பெறலாம் என திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

News January 25, 2025

பழனி ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை

image

குடியரசு தினத்தை முன்னிட்டு, பழனி ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் பொன்னுச்சாமி, இருப்புப் பாதை பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் கணேசன் ஆகியோர் தலைமையில், போலீசார் நடைமேடையில் பயணிகளின் உடமைகளை நேற்று ஆய்வு செய்தனர். மேலும், சந்தேகத்துக்கு இடமானவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துண்டுப் பிரசுரங்கள் வழங்கினர்.

News January 25, 2025

திண்டுக்கல் : மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று ( முன்னால் செல்லும் வாகனத்திற்கு 10 மீட்டர் இடைவெளி விட்டு பின் செல்வோம். விபத்தை தவிர்ப்போம்.) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News January 25, 2025

ஆன்லைன் வேலை: மக்களே எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட பொது மக்களுக்கு திண்டுக்கல் சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதில், இணைய தளத்தில் வரும் போலியாக ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்புகள் உள்ளது என யாரேனும் தொடர்பு கொண்டாலோ மற்றும் தங்களின் அலைபேசிக்கு குறுஞ்செய்திகள் வந்தாலோ அதை நம்பி முன்பணம் கட்டி ஏமாற வேண்டாம். விழிப்புடன் இருப்போம் தெரிவித்தனர். மேலும் அவசர உதவி எண் 1930க்கு தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

News January 25, 2025

திண்டுக்கல்லில் இன்றைய நிகழ்வுகள் 

image

திண்டுக்கல்லில் இன்று (25.01.2025) முக்கிய நிகழ்வுகள். ➢திண்டுக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 37-வது குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற உள்ளது . ➢ பாரதிய ஜனதா கட்சி திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தின் புதிய மாவட்ட தலைவர் அறிமுக கூட்டம் பழநி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ➢திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 10 வட்டாட்சியர் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

News January 25, 2025

விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை: அமைச்சர்

image

வேடசந்தூர், தொட்டனம்பட்டியில் ரூ.27- கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலைக்கு அமைச்சர் சக்கரபாணி நேற்று அடிக்கல் நாட்டினார். மேலும் அவர் கூறுகையில், விரைவில் விடுபட்ட அனைத்து மகளிருக்கும் கலைஞர் உரிமை தொகை வழங்கப்படும் என தெரிவித்தார். 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. 17.57.000 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!