India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல்லில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு<
திண்டுக்கலில் இன்றைய நிகழ்வுகள். ➢ முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை ஒட்டி காலை 8 மணிக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நினைவு நாள் பேரணி நடைபெற்றது. ➢ மக்கள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் அலுவலகம், திண்டுக்கல் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. ➢ கன்னிவாடியில் உள்ள சோமலிங்க சுவாமி கோயில், காலை 7:30 மணிமுதல் சோமவார பூஜை நடைபெறுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக (வேடசந்தூர் தொகுதி, திண்டுக்கல் தொகுதி) தர்மராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். தெற்கு (நத்தம் தொகுதி) நிர்மல்குமார், திண்டுக்கல் மத்தி (நிலக்கோட்டை, ஆத்தூர்) வாசுதேவன், மேற்கு மாவட்ட(ஒட்டன்சத்திரம், பழனி) கார்த்திக் ராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், நிலக்கோட்டை, பழனி,கொடைக்கானல், உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வடமதுரை பகுதியை சேர்ந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய வேடசந்தூர் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த ரவிகிரி(வயது 26) மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி சிவரஞ்சனி(21) ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வடமதுரை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை
ஆயக்குடி அமரபூண்டி பஸ் நிறுத்தத்தில் வாலிபர் அந்த வழியாக வந்த பேருந்தில் பள்ளி மாணவிகள் முன்பாக கத்தியை காட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணையில் மேலக்கோட்டை நவீன்குமார் (24) என்பது தெரிய வந்தது. மேலும் நவீன் குமார் மீது வழக்கு பதிந்து நேற்று சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக விழிப்புணர்வு புகைப்படம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. “ஆன்லைன் விளையாட்டில் உங்கள் நேரத்தையும் பணத்தையும் இழக்க வேண்டாம் உங்களின் ஆசையை தூண்டி பணத்தைப் பறிக்க பல போலியான ஆன்லைன் விளையாட்டுகள் உள்ளது எச்சரிக்கை” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இன்று கூட்டுறவு நகரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வாகை விளையாட்டு அரங்க துவக்க விழா நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட பழனி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் எம்எல்ஏ, எஸ் காந்தி ராஜன் கலந்து கொண்டனர். மேலும் இருவரும் டென்னிஸ் விளையாடி விளையாட்டை துவக்கி வைத்தனர். உடன் அரசு அதிகாரிகள், டென்னிஸ் விளையாட்டு வீரர்கள் இருந்தனர்.
குற்றப்புலனாய்வுத் துறை சரகங்களுக்கு விருப்பமுள்ள சட்ட ஆலோசகர்கள் விண்ணப்பிக்கலாம்;ஆலோசகர் காலியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் 5 சட்ட ஆலோசகர்களை நியமிக்க குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை திட்டம். விருப்பமுள்ளவர்கள் <
திண்டுக்கல் என்றாலே பிரியாணி, பூட்டு தான் நியாபகம் வரும். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் திண்டுக்கல் பெயர் எப்படி வந்ததுனு?. ஊர் நடுவில் திண்டைப் போல் பெரிய மழை இருந்ததால் “திண்டுக்கல்” என பெயர் வந்ததாக கூறுகின்றனர். இதுக்கு முன் திண்டி என்ற மன்னன், இந்நகரை ஆண்ட போது மக்களை துன்புறுத்தியதால் திண்டீஸ்வரம் என வந்ததாக கூறுகின்றனர். உங்க ஊர் பெயர் எப்படி வந்தது? கமெண்ட் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.