India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டத்தில் வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு வரும் (11.02.2025) செவ்வாய்க்கிழமை அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்குமாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திண்டுக்கல் கலெக்டர் செ.சரவணன் தெரிவித்துள்ளார்.
இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்
பழனியில் கடந்த மாதம் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் தோமையார் (எ) சின்னத்தம்பி(35) என்பவரை பழனி நகர் போலீசார் கைது செய்தனர். இவரின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் தோமையார் (எ) சின்னதம்பியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து பழனி நகர் போலீசார் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் நந்தவனபட்டி பகுதியில் ஹோட்டல் முன்பு பொன்னுவேல்(35) என்பவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரின் பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.6,40,000 பணத்தை திருடி சென்றது தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிசிடிவி பதிவுகளை வைத்து சம்பவத்தில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த சுந்தரபாண்டி(65), பாண்டியராஜன்(58) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் அரசு, உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும்தனியார் தொழிற்கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாணவிகள் பள்ளி மாணவ, (PM YASASVI Post Matric Scholarship) திட்டத்தின் மூலம் கல்வி உதவித்தொகை பெற (https://umis.tn.gov.in/) என்ற இணையதளத்தில்விண்ணப்பிக்கலாம்.
திண்டுக்கல் அடுத்த கொசவபட்டியில் 07.02.25 தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் கேட்கப்பட்டுள்ள விபரங்களுடன் இணையதளம் மூலம் 04.02.25-ம் தேதி காலை 08.00 மணி முதல் 05.02.25 அன்று மாலை 05.00 மணிக்குள் https://dindigul.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
உங்கள் பகுதியில் நிலவும் சாலை, குடிநீர், மின்சாரம், பேருந்து வசதி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லையா? கவலை வேண்டாம், இப்போதே Way2News செயலியில் நிருபராக மாறி உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை செய்திகளாக பதிவிட்டு அரசு அதிகாரிகள், மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். நிருபராக பதிவு செய்ய <
வேடசந்தூர் அருகே உள்ள சோழாமில் முன்பாக கருப்பதேவனூரை சேர்ந்த சுப்பிரமணி (55) என்பவர் டிராக்டரை ஒட்டிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள அரசு சர்க்கரை ஆலையில் சப்-கலெக்டராக பணியாற்றும் சிவகுமார் (52) என்பவர் ஒட்டி வந்த கார் டிராக்டரின் பின்பக்கமாக பயங்கரமாக மோதியது. இதில் கார் நொறுங்கியது. இதில் சிவகுமாருக்கு காயம் ஏற்பட்டது.
திண்டுக்கல்லில் இன்று 05-01-2025 இரவு 11.00 மணி முதல் நாளை வியாழக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
ஆத்தூர் அருகே வக்கம்பட்டியை அடுத்த கல்லுகடை பிரிவு அருகே நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதி விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் முதியவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.