Dindigul

News February 7, 2025

திண்டுக்கல் சரக டிஐஜி மாற்றம்!

image

திண்டுக்கல் சரக டிஐஜி வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மத்திய அரசின் இளைஞர் விவாகரத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், 5 ஆண்டுகள் அல்லது அடுத்த கட்ட உத்தரவு வரும் வரை மத்திய அரசு பணியில் நீடிப்பார். வந்திதா பாண்டே சில வாரங்களுக்கு முன்பு தான், திண்டுக்கல் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

News February 7, 2025

பெண்களுக்கான இலவச ஆரி ஒர்க் எம்ப்ராய்டரி பயிற்சி

image

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மெயின் ரோடு சிறுமலை பிரிவு அருகில் உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இன்று முதல் இலவச ஆரி ஓர்க் எம்ப்ராய்டரி பயிற்சிக்கான முன்பதிவு நடைபெறுகிறது.இப்பயிற்சியானது 1 மாத காலம் நடைபெறும். இதில்18 வயது முதல் 45வயதுடைய பெண்கள் கலந்து கொள்ளலாம் .பயிற்சியில் சேர முன்பதிவு செய்ய 9080224511,8870076537,

News February 7, 2025

திண்டுக்கல் சரக டிஐஜி மாற்றம்!

image

திண்டுக்கல் சரக டிஐஜி வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மத்திய அரசின் இளைஞர் விவாகரத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், 5 ஆண்டுகள் அல்லது அடுத்த கட்ட உத்தரவு வரும் வரை மத்திய அரசு பணியில் நீடிப்பார். வந்திதா பாண்டே சில வாரங்களுக்கு முன்பு தான், திண்டுக்கல் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

News February 7, 2025

நத்தம் அருகே பெண் வெட்டி படுகொலை

image

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதி, விளாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி சங்கீதா(35). இவரை லட்சுமணன் தம்பி, சுரேஷ்(42) என்பவர் வெட்டி படுகொலை செய்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நத்தம் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலையாளி சுரேஷை போலீசார் தேடி வருகின்றனர்.

News February 7, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று 07-02-2025 (பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் வரும் என வரும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்.) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News February 7, 2025

பக்தர்கள் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் பலி

image

திண்டுக்கல்- நத்தம் சாலை ஆர்.எம்.டி.சி காலனி அருகே பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை பக்தர்கள் சென்று கொண்டிருந்த கூட்டத்தில் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் காரைக்குடியை சேர்ந்த நவீன் குமார் (24) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

News February 7, 2025

திண்டுக்கல்லில் இன்றைய நிகழ்வுகள்

image

திண்டுக்கல்லில் இன்றைய(பிப்.7) நிகழ்வுகள். ➢ கொசவபட்டி புனித உத்திரியமாதா திருவிழா முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா காலை 08:00 மணிக்கு தொடக்கம். ➢ திண்டுக்கல் மறை மாவட்டம், மேட்டுப்பட்டி தூய வியாகுல அன்னை திருத்தலப்பங்கு, நடூர்புனித பெரிய அந்தோணியார் ஆலயம் ஆண்டுப் பெருந்திருவிழா கொடியேற்றம் இரவு 08:00 மணி. ➢ வண்டி கருப்பணசுவாமி கோயிலில் சிறப்பு பூஜை. 

News February 7, 2025

வள்ளலார் நினைவு தினம்: மதுக்கடைகள் மூடல்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு வரும் (11.02.2025) செவ்வாய்க்கிழமை அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்குமாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திண்டுக்கல் கலெக்டர் செ.சரவணன் தெரிவித்துள்ளார்.

News February 6, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம்

image

இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்

News February 6, 2025

கொலை செய்த வழக்கில் குண்டர் சட்டம் பாய்வு!

image

பழனியில் கடந்த மாதம் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் தோமையார் (எ) சின்னத்தம்பி(35) என்பவரை பழனி நகர் போலீசார் கைது செய்தனர். இவரின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் தோமையார் (எ) சின்னதம்பியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து பழனி நகர் போலீசார் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!