India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேடசந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரம் பகுதியில் திருச்சி பாரதியார் தெருவை சேர்ந்த ஆனந்த் என்பவர் பழனிக்கு பாதயாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மேல் மாத்தினிபட்டியைச் சேர்ந்த வினோத்குமார் ஓட்டி வந்த டூ வீலர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆனந்தை உடன் வந்தவர்கள் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
➢ திண்டுக்கல்லில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரில் உள்ள சாதனைப் படைத்த பெண்களுக்கு “வீர மங்கை” தாய்கூடு விருது வழங்கும் விழா, ஸ்வாகத் கிராண்டே ஹோட்டல், ( மாலை 5.00 மணி.
➢மனிதநேய மக்கள் கட்சியின் 17-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொது மருத்துவ முகாம் ஸ்ரீ மாலா நர்சரி & பிரைமரி ஸ்கூல் (சாலைத்தெரு, வேடசந்தூர், காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை
கன்னிவாடி, ஆலந்தூரான்பட்டி பகுதியில் உள்ள அய்யனார் கோவிலில் இருந்த 2 அடி நீளமுள்ள 3 குத்துவிளக்குகள், 1 அடி நீளமுள்ள 1 குத்துவிளக்கு ஆகிய 4 குத்துவிளக்குகளைதிண்டுக்கல், முருகபவனம் லட்சுமணபுரத்தை சேர்ந்த நாகராஜ், கொட்டபட்டியை சேர்ந்த ஜெயபிரியா ஆகிய 2 பேர் திருடி இருசக்கரவாகனத்தில் தப்பிச் செல்ல முயற்சித்த போது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவர்களை பிடித்து கன்னிவாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மெய்யம்பட்டி பகுதியில் இன்று இரவு 8.30 மணியளவில் திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பஸ் மோதியதில் பழனிக்கு பாதயாத்திரையாக சென்ற புதுக்கோட்டை- வலையபட்டியை சேர்ந்த சரவணன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து நத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
திண்டுக்கல்லில் இன்று 08-02-2025 இரவு 11.00 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 08-02-2025 இன்று (சீட் பெல்ட் அணிவோம். பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்.) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை இருக்கும். இந்நிலையில் யானை பாதை, படிப்பாதை, மலைக்கோயில் ஆகிய இடங்களில் டிரம்செட் மற்றும் தனியார் மேள வாத்தியங்கள் இசைக்க அனுமதி இல்லை. டிரம்செட் மற்றும் தனியார் மேள வாத்தியங்கள் இசைக்க கிரிவீதியை பயன்படுத்திக் கொள்ளவும்.
➢ இலவச மருத்துவ முகாம் பாதாள செம்பு முருகன் கோவில் வளாகம், காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை. ➢ தனியார் பள்ளிகள் பாதுகாப்பு மாநாடு, விருதுநகர் நாடார் உறவின்முறை மீட்டிங் மஹால், திண்டுக்கல் காலை 10 மணி. ➢ காவல்துறையின்சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமரா இயக்கும் விழா, பழனி நகர் காவல் நிலைய வளாகத்தில் நடக்கிறது.
திண்டுக்கல், கொசவபட்டியில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 780 மாடுகள், 300 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இதற்கு திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பங்கேற்றனர். இதில் 58 பேர் காயம் அடைந்தனர்.
திண்டுக்கல்லில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, மேலும், திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம்,ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல்,வேடசந்தூர், உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.