India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில் கோவிலில் பஞ்சாமிர்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அறநிலையத்துறை சார்பில் போதிய ஏற்பாடுகள் செய்யாததால் பஞ்சாமிர்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என பக்தர்கள் கூறியுள்ளனர். தட்டுப்பாடு காரணமாக தனியார் பஞ்சாமிர்த கடைகளில் இருந்து பக்தர்கள் பஞ்சாமிர்தம் வாங்கிச்செல்கின்றனர்.
ரெட்டியார்சத்திரம் அருகே கதிரணம்பட்டியில் நேற்று காரை வழிமறித்து, திருப்பூர் முருகன்பாளையத்தை சேர்ந்த வசந்த் (24) என்பவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இன்று (10-02-2025) இரவு 11.00 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
ரெட்டியார்சத்திரம் அருகே கதிரணம்பட்டியில் இன்று காரை வழிமறித்து, திருப்பூர் முருகன்பாளையத்தை சேர்ந்த வசந்த் (24) என்பவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக, தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (மது அருந்தி வாகனம் ஓட்டுவதைத் தவிர்போம். பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம், திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக, சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல்: நத்தம் துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில், புதூர் அருகே மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று டயர் வெடித்ததில், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பழைய வத்தலகுண்டுவை சேர்ந்த பூசாரி ராமு(57) என்பவரை நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் மேலும் அப்பகுதியில் 2 சிறுமிகளுக்கு பூசாரி ராமு பாலியல் தொல்லை கொடுத்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திண்டுக்கல், கோவிந்தாபுரத்தில் உள்ள இல்லத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை நேரில் சந்திக்க வந்த திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரியிடம் மாநகராட்சி பகுதியில் வரி வசூல் செய்யும் போது கெடுபிடி கூடாது. இது தவிர வரி வசூலின் போது பொதுமக்களிடம் மாநகராட்சி பணியாளர்கள் ஜப்தி, குடிநீர்குழாய் துண்டிப்பு போன்ற பணிகளை செய்து அத்திமீறக்கூடாது என்று அறிவுரை வழங்கினார்.
திருப்பதி லட்டுக்கான நெய்யில் கலப்படம் செய்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்பு குழு திண்டுக்கல், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை செய்து வந்தது. இந்நிலையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த பால், நெய் விற்பனை செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜசேகரன், உத்தரகாண்ட் நிறுவனத்தை சேந்த விபின் ஜெயின், பொலில் ஜெயின், அபூர்வா சாவ்டா ஆகியோரை கைது செய்தனர்.
➢ பொது மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலகம், திண்டுக்கல். காலை 10 மணிக்கு நடைபெறுகியது. ➢ பழனி நகர அரிமா சங்கம் FERO மோட்டார் அருகில் தைப்பூச முன்னிட்டு பக்தர்களுக்கான அன்னதானம் வழங்கும் விழா காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. ➢ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, சோமவார பூஜை காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளது.
Sorry, no posts matched your criteria.