Dindigul

News February 14, 2025

அஞ்சல் துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 63 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்க வேண்டும். <<>>ஷேர் பண்ணுங்க

News February 14, 2025

திண்டுக்கல்லில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

image

ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பொறியியல் கல்லூரியில் வருகின்ற 22/ 2/2025 அன்று தமிழ்நாடு அரசு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மற்றும் 10,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளது. காலை 9 முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது.

News February 14, 2025

பழனி தைப்பூசத் திருநாளில் ரூ.40 லட்சம் வசூல்

image

பழநி முருகன் கோயிலில் பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூச திருவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக வெளி மாநிலம், மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வருகை தந்தனர். அதன்படி 4 நாட்களாக 1400 பஸ்கள் இயங்கியது. 3000 ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றினர். அந்தவகையில் திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழகத்திற்கு ரூ.40 லட்சம் வசூலாகியுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 14, 2025

திண்டுக்கல்: மனைவி தலையில் கல்லை போட்டு கொலை

image

பிஸ்மிநகரை சேர்ந்த டீ மாஸ்டர் ஜெய்லாபுதீன். இவருக்கும் இவரது மனைவி முகமதாபீவிக்கும் தகராறு இருந்தது. நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வந்திருந்தார். நேற்று அதிகாலை 5 மணிக்கு டீக்கடையில் டீகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது முகமதாபீவி தலையில் கல்லை போட்டு கொலைசெய்யப்பட்ட நிலையில் கிடந்தார். விசாரணையில் போதையில் மனைவியை கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஜெய்லாபுதீனிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 14, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (பிப்.13) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், பழனி, நிலக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

News February 13, 2025

ஜல்லிக்கட்டில் கலந்து கொள்பவர்கள் கவனத்திற்கு! 

image

திண்டுக்கல் அடுத்த தவசிமடை கிராமத்தில் (16.02.25) அன்று நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள், கேட்கப்பட்டுள்ள விபரங்களுடன் (13.02.25) இன்று முதல் (14.02.25) அன்று மாலை 05.00 மணிக்குள் https://dindigul.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News February 13, 2025

வேகமாக பரவும் பொன்னுக்கு வீங்கி அம்மை நோய்

image

திண்டுக்கல் அருகே உள்ள கிராமம் பில்லம நாயக்கன்பட்டி. இந்த ஊரில் பள்ளி குழந்தைகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோருக்கு கண்ணத்தம்மை என்று சொல்லக்கூடிய நோய் பாதிக்கப்பட்டுள்ளது. பார்மிக்சோ எனப்படும் வைரஸ் தொற்று காரணமாக இந்த நோய் பரவுகிறது பரவுகிறது. வீங்கி உடல் சோர்வடையும் அறிகுறிகள் இருக்கும். இதனால், அச்சமடைந்துள்ளனர். 

News February 13, 2025

கொடைக்கானல்லில் சடலமாக இருவர்

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று விஷம் குடித்து முதியவர் மற்றும் மூதாட்டி உயிரிழந்து கிடந்தனர். மேலும் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே கிடந்தத இருவரின் உடலை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்த கொடைக்கானல் போலீசார் இருவர் உடலையும் கைப்பற்றி இறந்தது யார், எந்த ஊர் என விசாரணைமேற்கொண்டு உள்ளனர்.

News February 13, 2025

434 காலிப்பணியிடங்கள்: ரூ.50,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <>இங்கு க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்க வேண்டும்.

News February 13, 2025

4 பேருக்கு அரிவாள் வெட்டு

image

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட யாகப்பன்பட்டியில் 4 பேருக்கு அருவாள் வெட்டு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த வந்த மர்ம நபர் அரிவாளால் வெட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

error: Content is protected !!