Dindigul

News February 15, 2025

புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு முன்பதிவு: ஆட்சியர் தகவல்

image

திண்டுக்கல் புகையிலைப்பட்டி கிராமத்தில் 19-ம் தேதி அன்று நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் & காளைகளின் உரிமையாளர்கள், கேட்கப்பட்டுள்ள விபரங்களுடன் ஆன்லைன் மூலம் (16.02.2025)ம் தேதி காலை 08.00 மணி முதல் (17.02.2025) மாலை 05.00 மணிக்குள் https://dindigul.nic.in/ இணையத்தில் பதிவு செய்யலாம் மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.

News February 15, 2025

பழனி டூ திருப்பதிக்கு பேருந்து சேவை: பவன் கல்யாண்

image

பழனி முருகன் கோவிலில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், பழனி-திருப்பதிக்கு மீண்டும் பேருந்து சேவையும், ரயில் சேவையும் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், லட்டு நெய் விவகாரத்தில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். சாமி விஷயத்தில் யாரும் இப்படி பண்ணக்கூடாது என்றார்.

News February 14, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

திண்டுக்கல்லில் இன்று (பிப்.14) இரவு 11.00 மணி முதல் நாளை வியாழக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

News February 14, 2025

இருசக்கர வாகனம் மீது, பேருந்து மோதி விபத்து

image

திண்டுக்கல், மதுரை சாலை தோமையார்புரம் அருகே ,தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது, தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 14, 2025

திண்டுக்கல்லில் கார் கவிழ்ந்து விபத்து

image

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட அஞ்சலி ரவுண்டானாவில் இருந்து திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள டாடா ஷோரூம் அருகில் இன்று பிப்ரவரி 14,அதிவேகமாக வந்த கார் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியினில் இடித்து எதிர்த்து திசையில் ரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 14, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டும் பயணம் செய்வோம். விபத்தை தவிர்ப்போம்.) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News February 14, 2025

எலுமிச்சம்பழம் 5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்

image

பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களிலேயே தைப்பூசம் மிகவும் பிரசித்தி பெற்றது. தைப்பூசம் அன்று பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி காலடியில் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சம்பழம் 5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போய் உள்ளது. இதனை புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தை சேர்ந்த பக்தர் ஏலம் எடுத்துள்ளார்.

News February 14, 2025

வேடசந்தூர் முன்னாள் எம்.எல்.ஏ அழைப்பு

image

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.பி. பரமசிவம் அதிமுகவின் இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் தலைமையில் பிப்ரவரி 16ஆம் தேதி அன்று வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறுகிற மாநாட்டிற்கு அனைவரும் வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

News February 14, 2025

மூதாட்டி கொலை வழக்கில் திடீர் திருப்பம்

image

திண்டுக்கல் அருகே பிஸ்மி நகரில் மூதாட்டி கொலை வழக்கில் கணவனே மனைவியை கொன்றது அம்பலமானது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்பாக முகமதா பீவியின் நகையை வாங்கி ஜெய்னுல்லா அவரது உறவினருக்கு கொடுத்துள்ளார். முகமதா பீவி தனது நகையை கேட்டு ஜெயினுல்லாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயினுல்லா முகமதா பீவி தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.

News February 14, 2025

அஞ்சல் துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 63 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்க வேண்டும். <<>>ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!