India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் சுரேந்தர் என்பவர் ஓட்டிச் சென்ற காரின் டயர் வெடித்தது. இதில் அடுத்தடுத்து இரண்டு இருசக்கர வாகனங்களின் மீது கார் மோதிய விபத்தில், திருச்சியைச் சேர்ந்த பெரியசாமி(60) என்ற பூ வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பள்ளபட்டியைச் சேர்ந்த அஜய், அருண், மகேந்திரன் ஆகிய 3 பேர் காயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுரேந்தர் என்பவர் ஓட்டிச் சென்ற காரின் டயர் வெடித்தது. இதில் அடுத்தடுத்து இரண்டு இருசக்கர வாகனங்களின் மீது கார் மோதிய விபத்தில், திருச்சியைச் சேர்ந்த பெரியசாமி(60) என்ற பூ வியாபாரி சம்பவ இடத்திலேயே பலியானார். பள்ளபட்டியைச் சேர்ந்த அஜய், அருண், மகேந்திரன் ஆகிய 3 பேர் காயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டியில் ஒடுக்கம் தவசி மேடை கோயில் உள்ளது. இங்கு சிவராத்திரியை முன்னிட்டு 30 நாட்களுக்கு சூரிய ஒளி மூலவர் மீது படும். பரத்வாஜர் ஒரு தவமேடையில் யோகத்தில் மனதை ஒடுக்கி சிவனை வழிப்பட்டார். இதனால் இத்தலத்திற்கு ஒடுக்கம் தவசி மேடை என்ற பெயர் பெற்றது. இங்கு கோரிக்கை நிறைவேற பூட்டு போட்டு பக்தர்கள் சாமி கும்பிடுவார்கள். இந்த கோயில் சென்றிருந்தால் ஷேர் செய்யுங்கள் மக்களே.
திண்டுக்கல்லில் முக்கியமான கோவில்களில் கோட்டை மாரியம்மன். இக்கோவில் விஜயநகரப் பேரரசு காலத்தில் போர் வீரர்களின் காவல் தெய்வமாக வணங்கினர். திண்டுக்கல் கோட்டையின் அடிவாரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. கருவறையில் உள்ள மாரியம்மனுக்கு எட்டு திருக்கரங்கள் உள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் பக்தர்களின் காணிக்கையாக ரூ.3 கோடியே 31 லட்சத்து 92 ஆயிரத்து 776 கிடைத்தது. தங்கம் 557 கிராமும், வெள்ளி 21,235 கிராமும் கிடைத்தன. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு பணத்தாள்கள் 1,153 கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகள் ஆகியவற்றையும் பக்தா்கள் காணிக்கையாக கிடைத்தது.
நத்தம் அருகே துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குமரபட்டி புதூர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் இறந்த நிலையில் கிடக்கிறார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் நத்தம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் போலீசார் இறந்தவரின் பிரேதத்தை கைப்பற்றி இறந்தவர் யார் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் புகையிலைப்பட்டி கிராமத்தில் 19-ம் தேதி அன்று நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் & காளைகளின் உரிமையாளர்கள், கேட்கப்பட்டுள்ள விபரங்களுடன் ஆன்லைன் மூலம் (16.02.2025)ம் தேதி காலை 08.00 மணி முதல் (17.02.2025) மாலை 05.00 மணிக்குள் https://dindigul.nic.in/ இணையத்தில் பதிவு செய்யலாம் மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.
பழனி முருகன் கோவிலில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், பழனி-திருப்பதிக்கு மீண்டும் பேருந்து சேவையும், ரயில் சேவையும் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், லட்டு நெய் விவகாரத்தில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். சாமி விஷயத்தில் யாரும் இப்படி பண்ணக்கூடாது என்றார்.
திண்டுக்கல்லில் இன்று (பிப்.14) இரவு 11.00 மணி முதல் நாளை வியாழக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல், மதுரை சாலை தோமையார்புரம் அருகே ,தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது, தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.