India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல்லில் மூலவர் குபேரலிங்கேஸ்வரர் மேற்கு பார்த்து அருள்பாலிப்பது சிறப்பு. இத்தகைய மேற்கு பார்த்த சிவனை தரிசிப்பது ஆயிரம் சிவாலயங்களை தரிசித்த பலனை தரும் என்பது சிறப்பு. வேலைவாய்ப்பு, திருமண தடை போன்றவற்றிற்கு இக்கோயில் சிறந்தது. எனவே அன்பர்கள் வந்து வழிபட நல்ல பலன் காணலாம். இக்கோயிலை அனைவரும் ஷேர் செய்யுங்கள்.
திண்டுக்கல், வேடசந்தூர் தாலுகா, வடமதுரையில் இன்று 18.02.2024 காலை 11:30 மணிக்கு பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதனைத் தொடர்ந்து வடமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் லேசான அதிர்வு உணரப்பட்டது. இந்த பயங்கர வெடி சத்தம் மற்றும் அதிர்வு கடந்த சில வருடங்களாக இந்த பகுதியில் கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க முன்னாள் செயலாளர் உதயகுமார் கடுமையாக தாக்கப்பட்டார். இதை கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வலியுறுத்தியும் இன்று 18-ம் தேதி முதல் வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் மற்றும் செயலாளர் கென்னடி இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.
திண்டுக்கல்லில் இன்று 17-02-2025 இரவு 11.00 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, மாவட்ட ஆட்சியரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. விசாரணையில், அமரபூண்டியைச் சேர்ந்த கணேசன் என்பவர், தனக்கு பட்டாவுக்கான எஸ்.எல்.ஆர் கிடைக்காத ஆத்திரத்தில், கலெக்டர் கார் கண்ணாடியை உடைத்ததாக தெரியவந்தது. இதையடுத்து தாடிக்கொம்பு போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறையினருக்கு இலவச பஸ் பயண அட்டை வழங்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறையினர் பணியின் போது பேருந்தில் பயணம் செய்வதற்கு, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இலவச பேருந்து ஸ்மார்ட் கார்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், மாவட்ட காவல் துறையினருக்கு வழங்கினார்.
திண்டுக்கல், டெல்லி ரயில் நிலையத்தில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் 18 பேர் பலியானதற்கு உள்துறை மற்றும் ரயில்வே துறை நிர்வாகங்களின் அலட்சியமே காரணம். இந்த இறப்புகளுக்கு ஒன்றிய பாஜக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பலியானவர்கள் பாதிக்கப்பட்டவர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (உங்களது மொபைல் போனுக்கு முன் பின் தெரியாத நபர்கள் அனுப்பும் குறுஞ்செய்திகள் அல்லது லிங்கை கிளிக் செய்யவும் வேண்டாம்.. அதில் உங்களது விபரங்களை பதிவு செய்யும் வேண்டாம்…) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு <
திருச்சி தக்ஷன பாரத் ஹிந்தி பிரசார சபா சார்பில் திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக் பள்ளியில் ஹிந்தி தேர்வு நடந்தது. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில், ஹிந்தி மொழியை படித்த 910 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். அவர்கள் தேர்வு எழுத திண்டுக்கல்லில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்பட்டது. தேர்வுக்காக விண்ணப்பித்து இருந்த 910 மாணவர்களும் நேற்று திண்டுக்கல்லுக்கு வந்து தேர்வு எழுதினர்.
Sorry, no posts matched your criteria.