Dindigul

News February 20, 2025

தமிழ் மொழி இனி உலகை ஆளும்: ஐ.பெரியசாமி பேச்சு

image

செம்பட்டி: ”தமிழ் மொழி இனி உலகை ஆளும்” என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார். எஸ்.பாறைப்பட்டி நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை திறந்து வைத்தும், ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்க புதிய குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்தும் அவர் பேசியதாவது: 1965 முதல் தற்போது வரை தமிழகத்தின் தாய் மொழியான தமிழை ஆட்சி மொழியாக வைத்துள்ளோம். இணைப்பு மொழியாக ஆங்கிலம் உள்ளது. ஹிந்தி நமக்கு தேவையில்லை என்றார்.

News February 20, 2025

திண்டுக்கல்லில் 2 பேர் கொலை: மூவர் கைது

image

வத்தலக்குண்டு அருகே இருவரைக் கட்டையால் தாக்கிக் கொலை செய்த இளைஞர் உள்பட 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனா். இந்நிலையில், கைதான நவீன் என்பவரை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றபோது, அவர் தப்பியோட முயன்றார். அவரை போலீசார் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். அப்போது அவரது வலது கால் உடைந்ததால், வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாவுக் கட்டு போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

News February 19, 2025

திண்டுக்கல் ரோந்து விவரம்

image

இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம்: திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியாக திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகர், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதி ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News February 19, 2025

திண்டுக்கல் மாவட்ட மீனவர் நல வாரிய பதிவு துவக்கம்

image

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மீன் வளர்க்கும் விவசாயிகள், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள, மீன் விற்பனையாளர்கள், நல வாரியம் மற்றும் பி.எம்.எம். கே எஸ் எஸ் ஒய் திட்டத்தில் சேர நேருஜி நகரில் உள்ள மீனவர் நல இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள திண்டுக்கல் கலெக்டர் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News February 19, 2025

475 புதிரை வண்ணான் குடும்பம்: விடுபட்டோர் பதிவு செய்க!

image

திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டத்தில் புதிரை வண்ணான் 475 குடும்பம் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. புதிரைவண்ணார் இன மக்கள் 475 குடும்பங்கள் வசிப்பதாகவும் விடுபட்டவர்கள் திண்டுக்கல் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தில் பிப்ரவரி 27க்குள் பதிவு செய்ய கலெக்டர் சரவணன் இன்று தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News February 19, 2025

திண்டுக்கல் வந்த பிரபல நடிகர் 

image

திண்டுக்கல், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாடிக்கொம்பில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீசௌந்தரராஜன் பெருமாள் திருக்கோவில் இன்று தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான திரைப்பட நடிகர் யோகி பாபு வந்தார். அவரை கண்ட பொதுமக்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

News February 19, 2025

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மீன் வளர்க்கும் விவசாயிகள், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள் தேசிய மீன்பிடி டிஜிட்டல் தளம் மற்றும் மீனவர் நலவாரியத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் இன்று அறிவிப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.

News February 19, 2025

திண்டுக்கல்: வாலிபருக்கு 50 ஆண்டு சிறை

image

நத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2023ம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்த நத்தத்தை சேர்ந்த தர்மராஜ் (24) என்பவரை நத்தம் போலீசார் போக்சோவில் கைது செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று நீதிபதி தர்மராஜுக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

News February 19, 2025

சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

image

திண்டுக்கல், பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 17வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர்கள் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக பழனி, சிவகிரிபட்டியை சேர்ந்த பொன்குமார்(30) என்பவரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News February 19, 2025

திண்டுக்கல் மக்களே எச்சரிக்கை இதுதான்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று “லோன் ஆப் செயலி மூலம் கடன் வாங்காதீங்க.. இதன்  மூலம் உங்களது தகவல்கள் திருடப்பட்டு உங்களை மிரட்டி பணம் பறிக்க வாய்ப்புள்ளது” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!