Dindigul

News February 22, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

திண்டுக்கல்லில் இன்று (பிப்.21) இரவு 11.00 மணி முதல் நாளை புதன்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர். அதற்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கலாம் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 21, 2025

திண்டுக்கல் அருகே தீப்பிடித்து எரிந்த போர் லாரி 

image

திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியில், நிலத்தில் போர் அமைக்க பயன்படுத்தும் லாரி தீப்பிடித்து எரிவதாக, திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்புதுறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

News February 21, 2025

தமிழக அரசால் வழங்கப்படும் கல்வி ஊக்கத்தொகை

image

திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (21.02.2025) 2023-2024ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற காவலர் மற்றும் அமைச்சு பணியாளரின் 2 பிள்ளைகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் கல்வி ஊக்கத்தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப் வழங்கினார்கள்.

News February 21, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் தினந்தோறும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை பல்வேறு வகையான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் துறை மூலம் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று வங்கியில் இருந்து பேசுவதாக கூறி உங்கள் KYC விவரங்களை கேட்டால் அவர்களிடம் தெரிவிக்க வேண்டாம் என்றனர்.

News February 21, 2025

திண்டுக்கல் மக்களே நாளை மறந்து விடாதீங்க!

image

ஒட்டன்சத்திரம் கிறிஸ்தவ பாலிடெக்னிக்கில் மாவட்ட வேலைவாய்ப்பு வழிகாட்டல் மையத்தின் கீழ் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 200-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் 10,000 மேலான காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள எட்டாம் வகுப்பு முதல் ஐடிஐ டிப்ளமோ டிகிரி முடித்து வேலைக்காக காத்திருப்பவர்கள் தவறாமல் கலந்து பயன்பெறலாம்.

News February 21, 2025

திண்டுக்கல்: திரைப்பட இயக்குநர் சாமி தரிசனம்

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதி கொடைக்கானல் சுற்றுலாதலமான, பூம்பாறை மலை கிராமத்தில் உள்ள முருகன் கோயிலில் இன்று காலை, தமிழ் திரைப்பட இயக்குநர் டிராகன் பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து சாமி தரிசனம் செய்தார். மேலும் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

News February 21, 2025

உலக தாய்மொழி தின வாழ்த்து சொன்ன அமைச்சர்

image

வாழிய வாழியவே! இளமை குன்றா எமது இனிய மொழி, “யாதும் ஊரே” “யாவரும் கேளிர்” என்று உரைத்த பொன்மொழி, பாரெங்கும் பரந்து விரிந்துள்ள உலக மொழி, வான் புகழ் கொண்ட நம் செம்மொழியான, தமிழ் மொழி- வாழிய வாழியவே, என்று உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, தனது சமூக வலைதள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.

News February 21, 2025

மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க மானியம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் மீன் உற்பத்தி மற்றும்வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில்,பிரதம மந்திரி மீன்வளமேம்பாட்டு திட்டத்தின் கீழ்மானியம் வழங்கப்படுகிறது.குளங்கள் அமைப்பதற்கான திட்ட மதிப்பில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதமும்,ஆதிதிராவிடர் பெண்களுக்கு 60 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. திண்டுக்கல் நேருஜிநகரில் செயல்படும் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

News February 21, 2025

திண்டுக்கல்லில் இன்றைய நிகழ்வுகள்!

image

■ வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் தலைமையில் மதிப்பீட்டு குழு வேடசந்தூர் பகுதியில் ஆய்வு

■பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று இரவு முகூர்த்தகால் ஊன்றுதலுடன் துவக்கம்.

■அனுமந்தராயன்கோட்டை மறைவட்டம், வண்ணம்பட்டி பங்கு, வடக்கு மேட்டுப்பட்டி
கோடி அற்புதர் பதுவை புனித அந்தோணியார் திருவிழா இன்று ஆரம்பம்

News February 21, 2025

ஒட்டன்சத்திரம் நகை திருடிய பெண் கைது

image

பழனியைச் சோ்ந்தவர் சங்கீதா (37). இவா் ஜனவரி மாதம் 13-ஆம் தேதி வத்தலகுண்டு செல்வதற்காக ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்துக்கு வந்தாா். பின்னா், பேருந்துக்காக காத்திருந்த அவரிடமிருந்த 8 பவுன் தங்க நகையை அடையாளம் தெரியாத பெண் ஒருவா் திருடிக் கொண்டு மாயமானாா். ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் தங்க நகை திருடிய பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்

error: Content is protected !!