India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல்லில் 31 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளன. கூட்டுறவு சங்கங்களின் மூலமாக ஆத்தூரில் 4, நிலக்கோட்டையில் 4, வேடசந்தூரில் 4, நத்தத்தில் 3, பழனியில் 3, ஒட்டன்சத்திரத்தில் 2, திண்டுக்கல்லில் ஒரு இடத்திலும் திறக்கப்படவுள்ளன. தனியார் தொழில் முனைவோர் மூலமாக ஆத்தூரில் 3 இடங்களிலும், திண்டுக்கல்லில் 4 இடங்களிலும், நிலக்கோட்டை, பழனி, வேடசந்தூரில் தலா ஒரு இடங்களிலும் திறக்கப்படவுள்ளது.
திண்டுக்கல்லில் இன்று (பிப்24) நிகழ்வுகள். 1) திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் காலை 10:00 மணிக்கு நடக்கிறது. 2) வடமதுரை ஆண்கள் பள்ளியில் ஆண்டு விழா மதியம் 2 மணிக்கு நடக்கிறது. 3) முதல்வர் மருந்தகம் திறப்பு விழா, பழைய லட்சுமி மெடிக்கல்ஸ் வளாகம், திண்டுக்கல் ரோடு வடமதுரை காலை 10.30 மணிக்கு நடக்கிறது.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். திண்டுக்கல்லில் மட்டும் 63 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு முழுவதும் காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரமும் அவர்களது தொலைபேசி எண்ணையும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (மது போதையில் பயணம் நொடியில் மரணம். மது அருந்தி வாகனங்களை இயக்குவதை தவிர்ப்போம் என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள வீரமலை பகுதியில் வசிக்கும் அண்ணாவி என்பவரது மகன் பிரதீஷ் என்ற இரண்டரை வயது குழந்தை இன்று காய்ச்சலால் பலியானது. இந்த தகவல் அறிந்த திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் என்ன காரணத்தால் குழந்தை பாதிக்கப்பட்டது என தீவிர ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல் நகர் முழுவதும் காங்கிரஸ் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் வால்போஸ்டர் ஒட்டியிருந்தனர். அந்த போஸ்டரில், அகில இந்திய காங்கிரஸ் கட்டுப்பாட்டை மீறி பொய் புகார் அளித்த மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை வன்மையாக கண்டிக்கிறோம் என்று இருந்தது. இதனால் காங்கிரஸ் கட்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.
வேடசந்தூர் அருகே உள்ள காளணம்பட்டியை சேர்ந்தவர் சந்தோஷ்(30). இவர் தனது 10 வயது மகன் மற்றும் 7 வயது மகளுடன் ஸ்கூட்டியில் வேடசந்தூர் வந்துவிட்டு மீண்டும் தனது ஊரை நோக்கி சென்று கொண்டிருந்தார். மாசம்மாள் மல்லம்மாள் கோவில் அருகே சென்ற பொழுது திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியது. இதில் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். மகனும், மகளும் படுகாயம் அடைந்தனர்.
சகி- ஒருங்கிணைந்த சேவை மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கலெக்டர் சரவணன் கூறியுள்ளார். மாத ஊதியம் ரூ.10,000 முதல் ரூ.18,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு <
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்கள் வழக்கறிஞர் போராட்டத்தின் போது சமரசம் செய்ய பேச்சு வார்த்தைக்கு அழைத்த பொழுது இரண்டு வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதி என கூறியுள்ளார். ஆதனால் தான் முதன்மை நீதிபதியை சந்திக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சென்ற பொழுது அவருடன் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் என வழக்கறிஞர்கள் தடுத்தோம் என இன்று விளக்கம் அளித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.