Dindigul

News September 25, 2024

அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம்

image

கோரிக்கடவில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் மேயர் மருதராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர். மானூர், நரிக்கல்பட்டி மற்றும் தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். தமிழகத்தில் அண்ணா ஆட்சி காலம் பொற்காலம் என சீனிவாசன் பேசினார்.

News September 24, 2024

ஆதரவற்ற பெண்களுக்கு அரிய வாய்ப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் சுயதொழில் துவங்கி, மானியம் பெற www.tnwidowwelfareboard.tn.gov.in இணையதளம் வாயிலாக 15.10.24ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

News September 24, 2024

பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு

image

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக கோயில் நிர்வாகம் பாஜக நிர்வாகி மீது பழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அப்புகாரின் பேரில் இன்று பாஜக தொழில்பிரிவு துணைத் தலைவர் செல்வராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் செல்வராஜ்க்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

News September 24, 2024

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: திடீர் ட்விஸ்ட்

image

தேனியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், தன்னை மர்ம கும்பல் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு தப்பிச் சென்றதாகவும், திண்டுக்கல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், இதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை, மாணவி மன அழுத்தம் காரணமாக தவறான புகார் அளித்துள்ளார் எனவும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

News September 24, 2024

திண்டுக்கல்லில் சிறுவன் உட்பட 3 பேர் கைது

image

திண்டுக்கல், எரியோடு அருகே குறும்பபட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவர் தனது தோட்டத்தில் பயிரிட்டு அறுவடை செய்து வைத்திருந்த வெங்காயத்தை திருடிய, 15 வயது சிறுவன் மற்றும் அய்யலூரைச் சேர்ந்த கௌதம்(19), ரஞ்சித் (21) ஆகிய 3 பேரை எரியோடு போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 24, 2024

இலவச தையல் பயிற்சி முன்பதிவு அவசியம்

image

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மெயின்ரோடு சிறுமலை பிரிவு அருகில் அமைந்துள்ள கனரா ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் வருகிற செப்டம்பர் (25.9.2024) முதல் இலவச தையல் பயிற்சியானது நடைபெறுகிறது. இதில் பங்குபெறுவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக தரப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 9442628434, 8610660402, 0451-2904527, 8344950658 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

News September 23, 2024

முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க கடன் ஆட்சியர் அழைப்பு

image

முன்னாள் படைவீரர் நலனுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தினை சார்ந்த சுயதொழில் செய்ய விரும்பும் முன்னாள் படைவீரர்கள், படைப்பணியின் போது மரணமடைந்த படைவீரர்களின் கைம்பெண்கள் ஆகியோர் பயன்படலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News September 23, 2024

திண்டுக்கல் நிறுவனத்திற்கு மத்திய சுகாதாரத் துறை நோட்டீஸ்

image

திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டதாக தொடர்ந்த சர்ச்சையில் திருப்பதிக்கு நெய் விநியோகம் செய்த 4 நிறுவனத்திலிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதை அடுத்து திருப்பதிக்கு நெய் அனுப்பிய திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News September 23, 2024

திண்டுக்கல்: மாணவிக்கு பாலியல் தொல்லை

image

கேரளாவை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவியை கடத்தி வந்த மர்ம கும்பல் தேனியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதனையடுத்து தேனியில் இருந்து மாணவியை அழைத்து வந்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டு சென்ற மர்மகும்பல் தப்பி சென்றுள்ளது. இதனைதொடர்ந்து மாணவிக்கு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 23, 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் மின் தடை

image

கீழக்கோட்டை துணை மின்நிலையம், நத்தம் உப மின்நிலையம் மற்றும் திண்டுக்கல் துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமபரிப்பு நாளை செப்-24 நடைபெறவுள்ளதால், அன்றய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வசதி பெறும் பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அந்தந்த மின் செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.