India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013ஆம் ஆண்டு கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த செல்வகுமார் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த அசோக்குமார்(42), சக்திவேல்(47), அன்புராஜ்(38) ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனை & தலா பத்தாயிரம் அபராதம் விதித்து திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் வனத்துறை சார்பில் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் தேக்கு, குமிழ், நெல்லி,மகாகனி,முருங்கை உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளை வளர்த்து விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இலவசமாக வழங்குகின்றனர். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள வனத்துறை தோட்டத்தில் வளர்க்கப்படும் மரக்கன்றுகளை வாங்கி நடவு செய்யவேண்டும் என வனத்துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் கப்பல்பட்டியை சோ்ந்தவா் விவசாயி செல்வராஜ் 2006-ஆம் ஆண்டு அரசு பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தாா். இவரது குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.20.14 லட்சம் வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தாா். ஆனால் இதுவரை இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் நேற்று நீதிபதி உத்தரவின் பேரில் அரசு பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா்.
மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை.23, ஆகஸ்ட்.4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமலை மேலும் தீவிரமடைந்துள்ளது.இதனால் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய வடமேற்கு வங்ககடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் காரீப் பருவத்திற்கு வாழை, வெங்காயம், வெண்டை, கத்தரி, உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி ஆகிய தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்ததற்கான அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் ஆகிய ஆவணங்களுடன் அருகிலுள்ள பொது சேவை மையம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் காப்பீடு பதிவு செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி அவர்கள் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் குறைதீர்க்கும் முகாம் வருகின்ற ஜூலை-31 ஆம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பழநி வழியே தூத்துக்குடியிலிருந்து மேட்டுபாளையம் வரை விரைவு ரயில் சேவை ஜூலை 19 ஆம் தேதி தூத்துக்குடியில் தொடங்கவுள்ளது. இது தூத்துக்குடியில் வியாழன், வெள்ளி கிழமைகளில் 10.50 PM கிளம்பி 7.15 AM மேட்டுப்பாளையம் வந்து, பின் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் 8 PM கிளம்பி அதிகாலை 4.20 AM க்கு தூத்துக்குடி வந்தடையும். இது கோவில்பட்டி, விருதுநகர், பழநி, மதுரை, கோவை வழியே செல்லும்.
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை (ஜூலை.19) மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு அளிக்க உள்ளனர். இதில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளிக்கலாம் என ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.