India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377. 2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500. 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090. 4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098. 5. முதியோருக்கான அவசர உதவி -1253. 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033. 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க. அவரச காலத்தில் உதவும்!

1.முதலில் <

கிரெடிட் கார்டு மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி, ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் பாண்டித்துரை, நகுல்பிரபு, செந்தில்குமார் ஆகிய மூவரிடமிருந்து ரூ.13 லட்சத்தை வாங்கியுள்ளார். ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்ட சந்தோஷ், மோசடி செய்ததால், பாதிக்கப்பட்ட மூவரும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

திண்டுக்கல் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

திண்டுக்கல் டெலிபோன் காலனியில் வெங்கடேஷ் என்பவரது புல்லட்டை வீட்டிற்கு வெளியே இரவு நேரத்தில் நிறுத்தி இருந்த நிலையில் காணாமல் போனது. இதுகுறித்து நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், திண்டுக்கல் நாகல்நகர், மென்டோசா காலனியைச் சேர்ந்த கிஷோர் என்பவர் என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து புல்லட்டை பறிமுதல் செய்தனர்.

ஏழை எளிய மக்கள் வீடு கட்ட உதவும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.2.50 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விண்ணபிக்க<

பழனி சின்ன கலையம்புத்தூரை சேர்ந்தவர் கார்த்திக்கேயன். இவரின் மனைவி பிரேமலதா. இருவரும் பழனியை சேர்ந்த பாலசுப்பிரமணியன், சரவணமுத்து, முத்துக்குமார், ரமனேஷ் ஆகிய 4 பேரிடம் மின்சாரம், பொதுப்பணி, கல்வித்துறைகளில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 27 லட்ச ரூபாயை பெற்று கொண்டு மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து திண்டுக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு பிரேமலதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (டிச.31) சமூக வலைதளங்களில் பல போலியான பெயர்களில் மோசடி நபர்கள் வலம் வருகின்றனர். அவர்களின் வலையில் சிக்கி உங்கள் பணத்தை இழக்க வேண்டாம். எச்சரிக்கை.! என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Sorry, no posts matched your criteria.