Dindigul

News July 24, 2024

முருகனடியார்கள் பெயரில் விருது பெற அழைப்பு

image

பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றியவர்களுக்கு 15 முருகனடியார்களின் பெயரில் வழங்கப்படும் விருதுகளுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தகுதியுடையவர்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News July 24, 2024

திண்டுக்கல் மாவட்டத்திற்கு லேசான மழை

image

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழையும், திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு லேசான மழையும் பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 24, 2024

காவிரி – அமராவதி ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவர ஆய்வு

image

காவிரி, அமராவதி ஆறுகள் இணையும் இடத்திலிருந்து 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 6 குளங்களுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி ஆய்வு செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பழநி சுற்றுவட்டார பகுதியில் உள்ள 110 பயனாளிகளுக்கு ரூ.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் இதை பேசினார்.

News July 24, 2024

ரூ.4.5 கோடி முறைகேடு; காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

image

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.4.5 கோடி முறைகேடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் இளநிலை உதவியாளர் சரவணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கண்காணிப்பாளர் சாந்தி, சதீஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்த நிலையில் சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

News July 24, 2024

தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான ‘தமிழ் செம்மல் விருதுக்கு’ தமிழ் ஆர்வலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் விண்ணப்பதை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து ஆக.12 க்குள் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

News July 23, 2024

கல்வி உதவித்தொகை வழங்குவதாக ரூ.10 லட்சம் மோசடி

image

திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை வழங்கும் அதிகாரி பேசுகிறேன், உங்களுக்கு உதவித்தொகை அனுப்புகிறேன் என போனில் பேசி 15 நாட்களில் 70 பேரிடம் ரூ.10 லட்சத்தை மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர். அவர்களிடமிருந்து பணத்தை மீட்கும் முயற்சியில் திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக வரும் எந்த ஒரு தொலைபேசி அழைப்புகளையும் நம்ப வேண்டாம் என கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

News July 23, 2024

ஆந்திரா மற்றும் பீகாருக்கு மட்டும் தான் பட்ஜெட்டா?

image

திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட் குறித்த ‘எக்ஸ்’ தளத்தில் கூறியிருப்பதாவது: தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயரை நிதியமைச்சர் ஒருமுறை கூட உச்சரிக்கவில்லை. மத்திய அரசின் பட்ஜெட் ஒட்டுமொத்த நாட்டிற்கும் இல்லாமல் ஆந்திரா மற்றும் பீகாருக்கான பட்ஜெட் போல உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

News July 23, 2024

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், சென்னை ஓய்வூதிய இயக்கக இணை இயக்குநர் கமலநாதன் தலைமையில் இன்று (23.07.24) நடைபெற்றது. கூட்டத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நிலுவைத் தொகை, திருத்திய ஊதிய நிர்ணயம், பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் தொகை, உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஓய்வூதியர்கள் மனுக்கள் அளித்தனர்.

News July 23, 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று மாலை 7 மணி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை 7 மணி வரை திண்டுக்கல் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 23, 2024

அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

image

நத்தத்தில் பஸ்நிலைய ரவுண்டானா முன்பு அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தலைமை தாங்கினார். இதில் மின் கட்டண உயர்வை கண்டித்தும், ரேசன் கடைகளில் பாமாயில், பருப்பு தடையின்றி வழங்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கழக அம்மா பேரவை இணை செயலாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!