India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு கல்லூரி படிப்பின் போது மாதம் ரூ.1000 வழங்கு தமிழ் புதல்வன் திட்டம், இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி திண்டுக்கல் அரசு எம்.வி.எம். கலைக் கல்லூரியில் தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் இத்திட்டம் மூலம் பெற்றோர்களின் கல்விச் செலவு சுமை குறைகிறது என ஆட்சியர் பூங்கொடி பேசினார்.
2023 ஆம் ஆண்டுக்கான கைத்தறி நெசவாளருக்கான தேசிய விருதுக்கு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 17 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இருந்து 2 பேர் தேர்வு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் திண்டுக்கல்லை சேர்ந்த கைத்தறி நெசவாளர் பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர் டெல்லியில் ஆக.7 அன்று நடைபெறும் தேசிய கைத்தறி தின விழாவில் விருது பெற உள்ளார்.
திண்டுக்கல், நத்தம் என்பிஆர் கல்லூரியில் டிஎன்பிஎல் 2024 இறுதிக்கட்ட லீக் போட்டியில் இன்று (ஜூலை-27) இரவு 7.15 மணிக்கு ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி மோதின. இதில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. 170 எடுத்தால் வெற்றி என விளையாடிய, திருச்சி சோழாஸ் அணி 20 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 122 ரன் அடித்து தோல்வி அடைந்தது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர் கல்லூரியில் டிஎன்பிஎல் 2024 இறுதிக்கட்ட லீக் போட்டியில் இன்று (ஜூலை 27) பிற்பகலில் நடைபெற்ற போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.
தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல், தென்காசி, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழையும், நெல்லை மற்றும் குமரி மாவட்டத்திற்கு லேசான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னிவீர் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் கோயம்புத்தூர் நேரு ஸ்டேடியத்தில் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் திண்டுக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்வதற்காக அனுமதி அட்டை அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி அட்டை பெற்றவர்கள் முகாமில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி இன்று (ஜூலை 27) தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் என்.பி.ஆர் கல்லூரியில் டிஎன்பிஎல் 2024 இறுதிக்கட்ட லீக் போட்டியில் இன்று (ஜூலை.27) மதியம் 3 மணியளவில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதையடுத்து இரவு 7 மணியளவில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. இதில் ஜெயிக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
மதுரை – பெங்களூர் வந்தே பாரத் இரயில் திண்டுக்கல் இரயில் நிலையத்தில் நின்று செல்ல மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விடம் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் வலியுறுத்தினார். இந்நிலையில் கோரிக்கையை ஏற்று, திண்டுக்கல் இரயில் நிலையத்தில் வந்தே பாரத் இரயில் நின்று செல்லும் என தென்னக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் திண்டுக்கல் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். SHARE IT
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுதந்திர தினவிழா-2024 முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .பூங்கொடி தலைமையில் நேற்று (ஜூலை 26) நடைபெற்றது. அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் சே.ஹா.சேக் முகையதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கோட்டைக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை – பெங்களூர் வந்தே பாரத் இரயில் திண்டுக்கல் இரயில் நிலையத்தில் நின்று செல்ல மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விடம் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் வலியுறுத்தினார். இந்நிலையில் கோரிக்கையை ஏற்று, திண்டுக்கல் இரயில் நிலையத்தில் வந்தே பாரத் இரயில் நின்று செல்லும் என தென்னக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.