Dindigul

News July 29, 2024

மனு அளித்ததும் உடனே தீர்வு: ஆட்சியர் நெகிழ்ச்சி செயல்

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், இலவச தையல் இயந்திரம் கோரி ஒரு பெண் மனு அளித்தார். அந்த பெண்ணிற்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, விருப்புரிமை கொடை நிதியிலிருந்து தையல் இயந்திரத்தை உடனடியாக வழங்கினார். இதில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகேஸ்வரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் இருந்தனர்.

News July 29, 2024

திண்டுக்கல் நெசவாளருக்கு பாமக நிறுவனர் வாழ்த்து

image

திண்டுக்கல் மாவட்டம் நல்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற நெசவாளர் சிறந்த முறையில் திண்டுக்கல் பருத்தி புடவைகளை வடிவமைத்து நெய்து வருவதற்கான தேசிய கைத்தறி விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தேசிய கைத்தறி நாளான ஆகஸ்ட் 7ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் விருது பெற உள்ள பாலகிருஷ்ணன் பல சாதனைகள் படைக்க பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News July 29, 2024

பழனியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

image

ஆடி கிருத்தியை ஒட்டி இன்று பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் குவிந்த வண்ணம் உள்ளனர். வின்சி மூலம் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் காத்திருந்த நிலையில் காற்றின் வேகம் காரணமாக ரோப்கார் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி ரோப் கார் சேவை மாலை 5:00 மணி வரை தடைசெய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சுவாமி தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

News July 29, 2024

மாவட்ட அளவிலான தேக்வாண்டோ போட்டி

image

சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள பிரின்ஸ் தேக்வண்டோ கிளப் சார்பில் சாணார்பட்டி ரெங்கா மஹாலில் மாவட்ட அளவிலான தேக்வாண்டோ போட்டிகள்-2024ஐ சாணார்பட்டி தெற்கு மாவட்ட கவுன்சிலர் விஜயன் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சாணார்பட்டி ஒன்றிய துணை பெருந்தலைவர் ராமதாஸ், சாணார்பட்டி தெற்கு ஒன்றிய திமுக பொருளாளர் மற்றும் கொடைக்கானல் பள்ளி தாளாளர் மற்றும் மாநில & மாவட்ட தேக்வாண்டோ நடுவர்கள் பங்கேற்றனர்.

News July 28, 2024

TNPL: திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தோல்வி

image

நத்தம் என்.பி.ஆர் கல்லூரியில் இன்று (ஜூலை-28) இரவு நடைபெற்ற டிஎன்பிஎல் 2024 இறுதிக்கட்ட லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 19 ஓவர் 4 பந்தில் 10 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் அடித்தது. இதையடுத்து விளையாடிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி 17 ஓவர் 5 பந்தில் 6 விக்கெட் இழப்பிற்கு 138 ரன் அடித்து வெற்றி பெற்றது.

News July 28, 2024

TNPL – மதுரை பேந்தர்ஸ் அணி வெற்றி

image

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர் கல்லூரியில் டிஎன்பிஎல் 2024 இறுதிக்கட்ட லீக் போட்டியில் இன்று (ஜூலை-28) சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் சீகம் மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் சீகம் மதுரை பேந்தர்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன் அடித்தனர். இதையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

News July 28, 2024

TNPL – மதுரை பேந்தர்ஸ் அணி பேட்டிங்

image

நத்தம் என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் இன்று (ஜூலை 28) தற்போது நடைபெற்று வரும் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து மதுரை பேந்தர்ஸ் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இரண்டு அணிகளுமே பலம் வாய்ந்தது என்பதால் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.

News July 28, 2024

மாவட்ட அளவில் பேச்சுப்போட்டி – ஆட்சியர் அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அம்பேத்கர் பிறந்தநாள் பேச்சுப் போட்டிகள் வரும் 30ஆம் தேதியும், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் பேச்சுப் போட்டிகள் வரும் 31ஆம் தேதியும் நடைபெறவுள்ளன. போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News July 28, 2024

மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

image

திண்டுக்கல் வருவாய் கோட்டம், நிலக்கோட்டை வட்டம், நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் 31.07.2024 அன்று முற்பகல் 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நிலக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

News July 28, 2024

ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

திண்டுக்கல் மாவட்டம் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பெரும்பாறை மேல்நிலைப்பள்ளியில் ஒரு முதுநிலை இயற்பியல் ஆசிரியர் காலிப்பணியிடம் உள்ளது. இதற்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பணி செய்ய விருப்பமுள்ள நபர்கள் உரிய கல்விச்சான்றுகளுடன் திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஜீலை.31 க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!