Dindigul

News August 6, 2024

திண்டுக்கல் அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை

image

நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி திண்டுக்கல் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது. இங்கு ரூ.25 விற்பனை செய்யப்படும் கொடியினை அருகில் உள்ள அலுவலகங்களில் வாங்கிக் கொள்ளலாம். எனவே https://www.epostoffice.gov.in/ இணையதளத்தின் வாயிலாகவும் பதிவு செய்து வீட்டில் இருந்தபடியே போஸ்ட் மேன் மூலமாக பெற்று கொள்ளலாம் என கோட்ட கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

News August 6, 2024

முன்னாள் அமைச்சர் உறவினர் வீட்டில் ரெய்டு

image

திண்டுக்கலில், நிலமோசடி வழக்கில் சிக்கியுள்ள EX அமைச்சர் விஜயபாஸ்கர் உறவினர் ஆலை, திண்டுக்கல் அரசு ஒப்பந்த பணி அலுவலகம் உட்பட்ட 3 இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். திண்டுக்கல் இருந்து பரிமாற்றம் செய்த தகவல் தெரிய வந்ததை அடுத்து, கரூர் சிபிசிஐடி போலீசார், வருவாய் அதிகாரிகளுடன் திண்டுக்கல் அரசு ஒப்பந்தம் மேற்கொள்ளும் தனியார் அலுவலகத்தில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

News August 5, 2024

முத்தமிழ் முருகன் மாநாட்டில் சுகி சிவம் கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு

image

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வருகின்ற 24, 25 ஆகிய தேதிகளில் பழனியில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பிரபல ஆன்மீக பேச்சாளர் சு.கி.சிவம் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில், மாநாட்டிற்கு சு.கி.சிவம் கலந்து கொண்டால் இந்து மக்கள் கட்சி சார்பில் கருப்பு கொடி காட்டுவோம் என இந்து மக்கள் கட்சி துணை பொது செயலாளர் தர்மா தெரிவித்துள்ளார்.

News August 5, 2024

திண்டுக்கல் மாநகராட்சியில் மக்களை தேடி மருத்துவம்

image

தமிழ்நாடு அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் 4ஆம் ஆண்டு துவக்க விழா திண்டுக்கல் மாநகராட்சியில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, மருத்துவர்கள், செவிலியர்கள், திட்ட பயனாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News August 5, 2024

திண்டுக்கல்லில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நிறைவு

image

திண்டுக்கல் முனிசிபல் காலனியில் உள்ள SKY WAY – என்னும் தனியார் அலுவலகத்தில் இன்று கரூர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஏதும் உள்ளதா என சி பி சி ஐ டி போலீசார் சுமார் மூன்று மணி நேரம் சோதனையிட்ட பின் சோதனை நிறைவு பெற்றது என தெரிவித்தனர்.

News August 5, 2024

திண்டுக்கல்: 197 மனுக்களை பெற்ற ஆட்சியர்

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 197 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். அப்போது அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

News August 5, 2024

திண்டுக்கல்: மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

image

திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளி, ஸ்ரீராமபுரம், கோட்டப்பட்டி அரசு பள்ளி, இராமலிங்கம் பட்டி அரசு பள்ளி, கட்ட சின்னாம்பட்டி, தம்மனம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சார்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பாதாள செம்பு முருகன் அறக்கட்டளை சார்பாக கல்வி உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டது. இதில், அறக்கட்டளை அறங்காவலர் சேது பாலகிருஷ்ணன், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

News August 5, 2024

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் நாமக்கல், திண்டுக்கல்லில் சிபிசிஐடி சோதனை

image

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கில் கடந்த வாரம் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிலையில் நிலமோசடி வழக்கு சம்பந்தமாக தற்போது நாமக்கல், திண்டுக்கல் ஆகிய இடங்களில் சிபிசிஐடியினர் சோதனை நடத்தி வருகின்றனர்

News August 4, 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்நிலையில், திண்டுக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று இரவு 8.30 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இடையிடையே 30-40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 4, 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மழை பெய்யக்கூடும்

image

தமிழகத்தில் இன்று (ஆக.04) இரவு 7 மணி வரை 29 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!