India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்-24, மாநிலம் முழுவதும் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மாவட்டம், மண்டல அளவில் மற்றும் மாநில அளவில் நடத்தப்படவுள்ளது. https://sdat.tn.gov.in இணைய தளம் வாயிலாக ஆக-25க்குள் விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நாளை 23ஆம் தேதி தொடங்கி 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்போருக்கு தலா 200 கிராம் பஞ்சாமிர்தம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை நடத்தும் இந்த மாநாட்டில் 15 ஆதீனங்கள், 30 சொற்பொழிவாளர்கள் பங்கேற்கின்றனர். மேலும், இந்நிகழ்ச்சியில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திண்டுக்கல் அடுத்த குளத்தூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற விராலிப்பட்டி பகுதியை சேர்ந்த பெரியசாமி (52) என்பவர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
ஊரக வளர்ச்சித்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சிறுவிடுப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 649 அலுவலர்கள் நேற்று பணிக்கு வரவில்லை. மாவட்டத்தில் 73 சதவீத அலுவலர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
திண்டுக்கல்லைச் சோ்ந்த திருப்பதி ராஜ் என்பவர் மணிக்கூண்டு பகுதியில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சாா்பில் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். மாற்று இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பாக திண்டுக்கல் ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நேற்று உத்தரவிட்டது.
திண்டுக்கல்லில் ‘கோவை இதயங்கள்’ அமைப்பை சேர்ந்த டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 118 ஏழை சிறுவர்கள் தேர்வு செய்தார். இவர்களில் 65 பேருக்கு முதல் கட்டமாக இன்சுலின் மருந்துகள், 4.எம்.எம்.நீடில், 100 குளுக்கோஸ் ஸ்டிப், சர்க்கரை அளவை பரிசோதிக்கும் கருவிகள் மற்றும் 37 பேருக்கு குளிர்சாதன பெட்டிகள் ஆகியவை நேற்று இலவசமாக வழங்கப்பட்டது.
கொடைக்கானல் பூம்பாறை பகுதியைச் சோர்ந்த கோபால் (19), குழந்தைவேல் (19), சத்திரப்பட்டி வண்ணாம்பாறை வீரலபட்டி பகுதியைச் சோர்ந்த தருண் (19) ஆகிய 3 பேரும் பூம்பாறை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து சோதனை செய்ததில், அவர்களிடம் 150 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் நேற்று கைது செய்தனர்.
திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் பெய்த மழையால் ஒரே நாளில் 147மி.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையில் திண்டுக்கல் 6, பழநி 51.50, சத்திரப்பட்டி 12.80, நத்தம் 25, கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா 26.30, ரோஸ் கார்டன் 26.90 மி.மீ., என் மழையளவு பதிவாகி உள்ளது.
பழனி அடிவாரம் கிரி வீதி பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் நீதிமன்ற உத்தரவால் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதாக கூறி 24,25 ஆகிய இரு தினங்கள் முருகன் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் கருப்பு கொடி ஏற்றி கடையடைப்பு போராட்டம் நடைபெற இருப்பதாக என் மண் என் உரிமை மீட்பு குழு சார்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
திருநெல்வேலி வழக்கறிஞர் சரவணராஜ் படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டியும், வழக்கறிஞர்களின் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வற்புறுத்தியும், நாளை (22.08.2024) அன்று திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தலைவர் குமரேசன், செயலாளர் கென்னடி இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.