Dindigul

News January 17, 2026

கொடைரோடு அருகே ரத்தக் களறியான கொடூரம்!

image

திண்டுக்கல் கொடைரோடு மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட தகராறில், ராஜதானிக்கோட்டையைச் சேர்ந்த மனோஜ் தரப்பினர் ஆரோக்கிய வினோத் என்பவரின் வீட்டிற்குச் சென்று அவரை அரிவாளால் வெட்டினர். தடுக்க வந்த ரிச்சர்டு வினோத்துக்கும் வெட்டு விழுந்தது. காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக மனோஜ், மருதுபாண்டி, அரவிந்த் ஆகிய மூவரை அம்மைநாயக்கனூர் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

News January 17, 2026

திண்டுக்கல்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

திண்டுக்கல் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்

1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்

2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்

3.விண்ணப்பித்த 10 -15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News January 17, 2026

பழனி அருகே பயங்கரம் 9 பேர் படுகாயம்!

image

பழனி அருகே தும்பலப்பட்டி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அருகிலுள்ள குட்டையில் மாடுகளைக் குளிப்பாட்டச் சென்றனர். அப்போது திடீரென அங்குள்ள பாறையில் இருந்து கலைந்து வந்த கதம்ப வண்டுகள் கிராம மக்களை விரட்டி விரட்டி கடித்தன.இதில் சிறுமிகள் உட்பட 9 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.தகவலறிந்த அமைச்சர் சக்கரபாணி நேரில் சென்று ஆறுதல் கூறி, அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்

News January 17, 2026

சின்னாளப்பட்டியில் ரயில் விபத்து – ஒருவர் பலி

image

சின்னாளப்பட்டி முருகன்பட்டி ரயில்வே மேம்பாலத்தில், சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் சரக்கு ரயில் உரசியதில் பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்த திண்டுக்கல் ரயில்வே காவல்துறையினர், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 17, 2026

திண்டுக்கல்: வீட்டில் ஹீட்டர் தீ விபத்து !

image

திண்டுக்கல் கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டி பாப்பாத்தி வீட்டில் விக்னேஷ் தம்பதியர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில், இரவு 7 மணியளவில் குளியலறை ஹீட்டரில் அதிக மின்சாரம் காரணமாக தீப்பிடித்தது. அக்கம் பக்கத்தினர் தகவலால் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.வாஷிங் மெஷின் உள்ளிட்ட சில வீட்டு உபகரணங்கள் எரிந்து நாசமாகின.

News January 16, 2026

திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (ஜன.16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 16, 2026

திண்டுக்கல்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 16, 2026

திண்டுக்கல்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <>tnuwwb.tn.gov.in<<>> என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 16, 2026

திண்டுக்கல்லில் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை +91-44-22321090 / 22321085 / 22310989 / 22342142 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது <>இணையதளம் <<>>மூலமாகவோ அணுகி புகார் அளியுங்கள். திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு(0451-2461828) அலுவலகத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ நேரில் சென்றும் புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News January 16, 2026

கொடைக்கானலில் தண்ணீர் டீசலா? உஷார் மக்களே

image

கொடைக்கானல்: பண்ணைக்காடு பேரூராட்சி ஊத்து பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பிய சிறிது நேரத்திலேயே வாகனங்கள் பழுதாகி நின்றன. மெக்கானிக் மூலம் பரிசோதித்தபோது, டீசலில் அதிகளவு தண்ணீர் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. அடிக்கடி இதுபோன்று வாகனங்கள் பழுதாகி நிற்பதால், பெரும் நஷ்டம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிப்பதோடு, உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!