India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 2024- நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகளுக்குட்பட்டு “வி.ஐ.பி சிறப்பு அனுமதி சீட்டுகள் ” வழங்கப்படாது என திருக்கோயில் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பக்தர்கள் மற்றும் அரசியல் பிரமுகர் பொது தரிசன வழியை பயன்படுத்த வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக இன்று 19.03.2024- வழக்கறிஞர் சங்க துணை தலைவர் குமரேசன் அவர்கள் தலைமையில், செயலாளர் உதயகுமார் அவர்கள் முன்னிலையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து உறுப்பினர்களின் கருத்தை கேட்ட பின்பு நாளை 20.03.2024- நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை நடத்த ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் போக்சோ வழக்கில் இன்று (மார்ச் 19) விசாரணைக்கு ஆஜரான ஷாஜகான் என்பவர் நீதிமன்ற மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார். படுகாயமடைந்த ஷாஜகான் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் இரண்டாம் நாள் திருவிழா இன்று நடைபெற்று வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பழனிக்கு பக்தரின் வருகை குறைந்துள்ளது. கிரிவலப் பாதையில் பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டியில் கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-4 மற்றும் தொகுதி-2 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற வெள்ளிக்கிழமை (மார்ச்.22) முதல் தொடங்கவுள்ளது.போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நத்தம் அருகே உலுப்பக்குடியில் வேட்டைக்காரன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல நூறு ஆண்டுகளாகவே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. நேற்று நள்ளிரவில் பொங்கல் வைத்து வழிபாடு செய்த பின்னர் நேர்த்திக்கடனாக 50 ஆடுகள் பலியிடப்பட்டு ஒரே இடத்தில் சமைக்கப்பட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு விடிய விடிய பிரசாதமாக வழங்கப்பட்டது.இதில் ஏராளமான ஆண்கள் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தேர்தல் தொடர்புடைய புகார் அளிப்பதற்காக கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார். கட்டணமில்லா உதவி எண் 1800 5994 785-,1950, 0451-2400163, மேலும் அணைத்து வட்டாச்சியர் அலுவலகத்திலும் கட்டுபாட்டு அறை அமைக்கபட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உதவி எண் 04553-241100 என்ற கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஏரக்காபட்டி பகுதியில் (மார்ச் 18 ) இன்று காரைக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த மூங்கில்பட்டியை சேர்ந்த அழகு பாண்டி என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்து வந்த நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் இன்று (18.03.2024) திண்டுக்கல் – தாராபுரம் செல்லும் தனியார் பேருந்து வெளிய சென்ற போது இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனம் முழுவதும் சேதமானது. இதையடுத்து அருகே இருந்தவர்கள் இருசக்கர வாகனத்தை மீட்டனர். இந்த விபத்தில் காயமின்றி இருசக்கர வாகன ஓட்டுநர் உயிர் தப்பினார்.
பழனி அருகே உள்ள அய்யம்பாளையத்தில் வட்டாட்சியர் சக்திவேல் அவர்கள் தலைமையிலான பறக்கும் படையினர் இன்று 18.03.2024-பழனி( FST-1 TEAM ) தணிக்கையில் ஈடுபட்ட போது உடுமலைப்பேட்டையை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவரது வாகனத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் ஒரு லட்ச ரூபாய் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.