India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டுக்கல் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

திண்டுக்கல் அங்குநகர் துணை மின் நிலையத்தில் நாளை (ஜன-20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் திண்டுக்கல் மாநகர் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி, N.S.நகர், குரும்பபட்டி, பொன்மாந்துறை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்சார விநியோகம் தடைபடும் என்று திண்டுக்கல் செயற்பொறியாளர் (மேற்கு) வெங்கடேசன் தகவல் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க!

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

திண்டுக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <

திண்டுக்கல் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்றானுமா? இதற்காக இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே <

ரெட்டியார்சத்திரம் காவல் ஆய்வாளர் மு.ஆறுமுக நயினாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, வெயிலடிச்சாம்பட்டி பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளர் முத்துசாமி மற்றும் காவலர் தீபா ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கட்டைப்பையில் கஞ்சா வைத்திருந்த முத்தனம்பட்டியை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 3.6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெட்டியார்சத்திரம் காவல் ஆய்வாளர் மு.ஆறுமுக நயினாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, வெயிலடிச்சாம்பட்டி பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளர் முத்துசாமி மற்றும் காவலர் தீபா ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கட்டைப்பையில் கஞ்சா வைத்திருந்த முத்தனம்பட்டியை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 3.6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் சிறப்பு நடவடிக்கையாக கொலை, கொள்ளை, ரவுடிசம், பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட ஏராளமான வழக்குகளில் 174 பிடிவாரன்ட் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். போலீஸ் ஸ்டேஷன்களில் நிலுவையிலுள்ள பிடியாணைகளை நிறைவேற்றும்படி எஸ்.பி. பிரதீப் அனைத்து சப்டிவிசன் டிஎஸ்பி.க்கள், இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி ஜன.9 – ஜன.17 வரை சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, கிரெடிட் கார்ட் வரம்பை உயர்த்துவதாக வரும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் சந்தேகஸ்பதமான லிங்குகளை நம்ப வேண்டாம் என்று அறிவித்துள்ளது. இந்த மோசடிகளில் வங்கி விவரங்கள், ஓடிபி குறியீடு போன்ற தனிப்பட்ட தகவல்களை பெற முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 1930 (அ) cybercrime.gov.in-ல் புகார் செய்யலாம்.
Sorry, no posts matched your criteria.