India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கவிஞர். திலகபாமா; பட்டிவீரன்பட்டியில் பிறந்து சிவகாசியில் வசித்து வருகிறார். கணவர் இருதய சிகிச்சை மருத்துவர். மகன்களும் மருத்துவர்கள், 3-சிறுகதை தொகுப்புகள்,11- கவிதை தொகுப்புகள், 2 வரலாறு தொகுப்புகள் எழுதியுள்ளார். மது ஒழிப்பு போராட்டம், பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளார்.
வடமதுரை பகுதியில் கடந்த ஆண்டு 2023ஆம் ஆண்டு 10 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய மனோஜ் குமார்( 21) என்ற இளைஞரை வடமதுரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி இன்று 21ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.3000 அபதாரம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாக வளாகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று பதினெட்டு சித்தர்கள் கட்சி சார்பாக மக்களவை தேர்தலில் போட்டியிட ஆண்டிமடம் ஆறுமுகசாமி என்பவர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. தலைமையிலான – I.N.D.I.A. கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் இன்று S.K.M. திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பெரிய சாமி, சக்கரபாணி கலந்து கொண்டு கூட்டணி கட்சியினரிடம் வேட்பாளரை அறிமுகம் செய்துவைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பாண்டியன் நகர் காட்டாஸ்பத்திரி அருகில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசின் இலவச திறன் மேம்பாட்டு தொழிற்பயிற்சியின் கீழ் செயல்படும்( ASA SKILL PLUS) இலவச அழகு கலை பயிற்சிக்கு இன்று (மார்ச்.22) முதல் அட்மிஷன் நடைபெறுகிறது. இதன் பயிற்சி காலம் 4 மாதங்கள். பயிற்சி முடித்தவுடன் தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். ஆர்வமுள்ள பெண்கள் இதில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக திலகபாமா சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம், புதுவையில் பா.ஜ.க கூட்டணி சார்பில் பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 தொகுதிகளுக்கு பா.ம.க சார்பில் தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி மலைக் கோவிலில் நாளை(மார்ச்.23) முதல் மார்ச்.26 வரை பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால் இரவில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே சமயம் பக்தர்கள் தங்கரதம் இழுப்பதற்கும் அனுமதி கிடையாது. இன்று வழக்கம் போல் இரவு 7 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும்.
திண்டுக்கல்லை அடுத்த சாணார்பட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 1.1/2 பவுன் தங்க நகையை பறித்த கதிரியன்குளம் பகுதியை சேர்ந்த பிச்சை தேவர் மகன் ராஜசேகர் (38) என்பவரை நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் தங்க முனியசாமி தலைமையிலான போலீசார் நேற்று(நேற்று) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை இபி காலனியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (64)., மனைவி கஸ்தூரிபாய் கொடைக்கானலில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் வீட்டில் இன்று காலை துர்நாற்றம் வீசியதால் அருகில் வசிப்பவர் வடமதுரை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்து கிடந்த ராதாகிருஷ்ண உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலக்கோட்டை அருகே நூதலாபுரம் கிராமத்தில் திண்டுக்கல் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அமைய உள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மார்ச் 27ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணமாக அன்றைய தினம் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுகிறது என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.