India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல், வேடசந்தூர் வட்டம் மோளப்பாடியூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி செல்வி தங்கமணி 2024ல் நடைபெற்ற நீட் தேர்வில் வெற்றி பெற்று மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலும் வாய்ப்பை கிராமத்தில் முதல்முறையாக பெற்றார். இவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நடைபெறும் விநாயகர் ஊர்வலங்களில் எந்தெந்த பகுதிகள் வழியாக செல்வது மற்றும் எங்கே கரைப்பது போன்ற பகுதிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆய்வு செய்தார். உடன் பழனி சரக காவல் து.கண்காணிப்பாளர் தனஞ்செயன், காவல் ஆய்வாளர் மணிமாறன் சார்பு ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.
➤திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை செப்.1ம் தேதி ரோலர் ஸ்கேட்டிங் போட்டிக்கு தேர்வு நடைபெறவுள்ளது. ➤மதுரை- பெங்களுர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை திண்டுக்கல் வந்ததையடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். ➤திண்டுக்கல் கோட்டைக்குளம், நிலக்கோட்டை வைகை ஆறு, வத்தலக்குண்டு, அம்மையநாயக்கனூர், ஒட்டன்சத்திரம் தலைக்குத்து அருவி, நத்தம் அம்மன்குளம் உள்ளிட்ட இடங்களில் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து கூட்டம் இன்று நடைபெற்றது. இதில்
விநாயகர் சதுர்த்தியின் போது, இரசாயனக் கலவையற்ற விநாயகர் சிலைகளை மட்டும் வழிபாட்டிற்கு பயன்படுத்தி, தெரிவு செய்யப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் நிலை கரைக்கும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல் கோட்டைக்குளம், நிலக்கோட்டை வைகை ஆறு, கண்ணாப்பட்டி ஆறு, வத்தலக்குண்டு, அம்மையநாயக்கனூர், ஒட்டன்சத்திரம் தலைக்குத்து அருவி, பழனி சண்முகாநதி, வேடசந்தூர் அழகாபுரி ஆறு, நத்தம் அம்மன்குளம், கொடைக்கானல் டோபிகானல் ஆகிய இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆத்தூர் வக்கம்பட்டி அருகே உள்ள மைக்கேல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(25). இவர் மன உளைச்சலில் அப்பகுதியில் உள்ள புங்கமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. இந்நிலையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி இன்று நீட் தேர்வில் வெற்றிபெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் சேர தகுதி பெற்றுள்ள, ஒட்டன்சத்திரம் தொகுதியைச் சேர்ந்த மாணவ – மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
பழனியில் அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கடந்த 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்நிலையில், மாநாட்டில் தூய்மை பணியில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்களை, குடும்பத்துடன் அழைத்து வந்து கண்காட்சி பார்வையிட அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இதையடுத்து தூய்மை பணியாளர்கள் குடும்பத்துடன் நேற்று கண்காட்சி அரங்கத்தை கண்டுகளித்தனர்.
திண்டுக்கல் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பாக செப்டம்பர் 1ஆம் தேதி, மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி மற்றும் மாநில போட்டிக்கு தேர்வு நடைபெற உள்ளது. சீலப்பாடி வித்யா பாரதி குழுமத்தில் நடைபெறும் இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு விளையாட்டு இட ஒதுக்கீடு மதிப்பெண்கள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 89254 12360, 99769 14993 எங்களை தொடர்பு கொள்ளலாம்.
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி (கனரா வங்கி) சார்பில் மாணவர்களுக்கான கல்விக் கடன் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் கலந்து கொண்டு, 163 மாணவர்களுக்கு ரூ.6.32 கோடி மதிப்பிலான கல்வி கடன் உதவிகளுக்கான ஆணையை வழங்கினார். நிகழ்வில் கனரா வங்கி உதவிப் பொதுமேலாளர் பல்லானி ரங்கநாத், எஸ்பிஐ வங்கியினர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.