India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நிலக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வீட்டிலிருந்தே தபால் வாக்கு செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. வாக்கு சேகரிக்கும் குழுவில் உள்ள மண்டல அலுவலர், வாக்கு சேகரிக்கும் அலுவலர், நுண் கண்காணிப்பு அலுவலர் ஒளிப்பதிவாளர், வாக்குச்சாவடி நிலை அலுவலர் உள்ளிட்ட குழுவினர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வீடு வீடாக சென்று தபால் வாக்குகளை பெரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பழனி அருகே ஆயக்குடியில் ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் சிமென்ட் கூரை இடிந்து விழுந்தது. இதில் சமையல் பணியாளர் உட்பட 5 மாணவிகள் காயமடைந்தனர். 20 க்கும் மேற்பட்ட மாணவிகள் இன்று காலை உணவு அருந்தி கொண்டிருந்த நேரத்தில் சுவர் விழுந்ததில் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த சமையலர் அபிராமி, நளினி, தர்ஷினி, ரெங்கநாயகி, தேவி உள்ளிட்ட 6 பேர் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் திருவிழா அழைப்பிதழை பொதுமக்களுக்கு ஆர்.டி.ஓ சரவணன் தலைமையில் வழங்கப்பட்டது. அழைப்பிதழில் 100 சதவீதம் வாக்குபதிவை நடத்திட தங்கள் உரிமையை நிலை நாட்டிட அன்புடன் அழைக்கிறோம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அழைப்பிதழ் வழங்கும்போது வெற்றிலை, பாக்கு, பழம் உடன் தாம்பூல தட்டுடன் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் நாடளுமன்ற தேர்தல் ஏப்.19 இல் நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சுள்ளெறும்பு 4 ரோட்டில் அமைந்துள்ள மதுபானக்கடையில் மொத்தமாக மதுபானங்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் மேற்பாா்வையாளா் கிருஷ்ணன், விற்பனையாளா்கள் கணேசன், ரஞ்சித்குமாா், உதவி விற்பனையாளா் பழனிச்சாமி ஆகியோரை நேற்று பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் மேலாளா் உத்தரவிட்டுள்ளார்.
பழனி மானூர் கிராமத்தில் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். மோடி வரிகளை போட்டு மக்களிடம் இருந்து பணத்தை எடுக்கிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கான திட்டங்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறார். திட்டங்களைக் கொடுப்பவருக்கு ஆதரவாக வாக்களியுங்கள் என பிரச்சாரம் மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ கொடி அணிவகுப்பு பேகம்பூர் பகுதியில் துவங்கி யானைத்தெப்பம், R.V நகர், முத்தழகுப்பட்டி, செல்லாண்டியம்மன் கோவில் தெரு வழியாக சென்று நகர் தெற்கு காவல் நிலையத்தில் இன்று முடிவடைந்தது. நிலக்கோட்டை மற்றும் பழனியில் அணிவகுப்பு நடைபெற்றது.
திண்டுக்கல்லை அடுத்த எரியோடு அருகே பாதை பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில் சின்னம்மாள், மகாலட்சுமி ஆகிய 2 பேரை எதிர்வீட்டை சேர்ந்த பாப்பாத்தி, அவரது மகன் சங்கர் ஆகிய இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த சின்னம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மகாலட்சுமி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார், பாப்பாத்தி, சங்கரை கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மெயின் ரோடு சிறுமலை பிரிவில் அமைந்துள்ள கனரா ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் நாளை (ஏப்ரல் 5) முதல் இலவச கணினி பயிற்சி ஆரம்பமாகிறது. இதற்கு முன்பதிவு செய்து விண்ணப்பித்து தேர்ச்சி பெற்றவர்கள் மேற்குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் பயிற்சியில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
திண்டுக்கலில் புகழ்பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது. இதனால் திண்டுக்கல் மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் ஆடு மற்றும் கோழிகளை மொத்தமாக விலைக்கு வாங்க அதிகளவில் சந்தைக்கு வருகின்றனர். இன்று அதிகாலை சந்தை கூடியது ரம்ஜான் பண்டிகை நெருங்கி வரும் வேளையில் தேர்தல் விதிமுறையால் வழக்கத்தைக் காட்டிலும், விவசாயிகளும் வியாபாரிகளும் மிகவும் குறைவாக வந்திருந்தனர்.
Sorry, no posts matched your criteria.