India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று காலை 8:30 மணியில் இருந்து இன்று காலை 8:30 வரை பெய்த மழை அளவு, திண்டுக்கல் (RDO அலுவலகம்) 0.00, காமாட்சிபுரம் 0.00, நத்தம் 0.50, நிலக்கோட்டை 0.00, சத்திரப்பட்டி 18.00,
வேடசந்தூர் (தாலுகா அலுவலகம்) 0.00, வேடசந்தூர் (புகையிலை நிலையம்) 0.00, பழனி 4.00, கொடைக்கானல் ரோஜா தோட்டம் 26.00, பிரையண்ட் பூங்கா 46.80, மொத்தம் 95.30 மழை அளவும், சராசரி 9.53 மழை பெய்துள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டிய 34 கடைகளின் ஏலம் நடைபெற்றதில் முறைகேடுகள் குறித்து, திண்டுக்கல் மாநகராட்சி பாஜக மாமன்ற உறுப்பினர் தனபாலன் தொடுத்த வழக்கின் தீர்ப்பினை 30.09.2024 திங்கட்கிழமை இன்று காலை 11:00 மணிக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதி அரசர்கள் தீர்ப்பு கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் நேற்று முன் தினம் இரவு பெய்த கனமழையால் 15 வீடுகள் இடிந்து விழுந்தன. இதனையடுத்து நேற்று வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர் சிதம்பரம், தாசில்தார் தனுஷ்கோடி ஆகியோர் காட்டாற்று பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டனர். வீடுகளை இழந்தவர்கள் சமுதாயக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதில் உயிர் சேதம் ஏற்படவில்லை..
திண்டுக்கல்: தாடிக்கொம்பு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உலகம்பட்டி, வடக்கியூர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய சார்லஸ், கோபாலகிருஷ்ணன், வடிவேல், சரவணகுமார், அருண்குமார், முருகேசன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து பணம் மற்றும் சீட்டுக்கட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தீயணைப்புத்துறை, வருவாய்த்துறையினர் இணைந்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் வெள்ளப்பெருக்கின் போது பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது. இந்நிகழ்வில் தாசில்தார் சஞ்சய், தீயணைப்பு நிலை அதிகாரி காளிதாஸ் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) சட்டம் 1981-ன்கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் மதுக்கடைகள் 2-ம் தேதி (புதன்கிழமை) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும். அன்று மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்குமாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல், பஸ் ஸ்டான்ட் அருகில் உள்ள பாலாஜிபவன், எதிர்புறம் பென்சனர் காம்பவுண்ட் பகுதியில் நேற்று சுமார் 6க்கும் மேற்பட்ட ஒரு மர்ம கும்பல் சம்சுதீன் மகன் முகமது இர்பான் (27) என்பவர் தலையை வெட்டி சிதைத்து கொடூரமாக கொலை செய்தனர். இதை தடுக்க வந்த அப்துல்லாஹ் என்பவருக்கும் தலையில் வெட்டப்பட்டு காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதை நகர் வடக்கு போலீசார் தீவிர விசாரணை செய்கின்றனர்.
கொடைக்கானல் அண்ணாசாலையில் உள்ள மசாஜ் சென்டரி்ல் பணிபுரியும் பெண்களிடம் இன்று சென்னையை சேர்ந்த ஆர்யா, திவாகர், பிரேம், சாலமன் ஆகிய 4 இளைஞர்கள் அத்து மீறியுள்ளனர். மேலும், பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர்களுக்கு பயந்து சாலையில் ஓடிய பெண்களை, அந்த இளைஞர்கள் நிருபர் என கூறி பின் தொடர்ந்து வீடியோ எடுத்துள்ளனர். இதையடுத்து 4 இளைஞர்களையும் கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல், புறநகர், சாணார்பட்டி, ஆத்துார், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் கலைவாணி தலைமையில் அலுவலர்கள் செல்வம், ஜாபர் சாதிக், ஜோதிமணி உள்ளிட்டோர் கடைகளில் ஆய்வு செய்தனர். 150 கிலோ தடை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து 20 கடைகளுக்கு சீல் வைத்தனர். ரூ.6 லட்சம் அபராதமும் விதித்தனர்.
கொடைக்கானல் தெரசா பல்கலையில் அக்-23 நடக்கும் 31 வது பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்பதாக பல்கலை துணைவேந்தர் கலா கூறினார். மேலும் அவர் கூறியதாவது: பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி , டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை பேராசிரியர் சாந்தி ஸ்ரீ துளிப்புடி பண்டிட் கலந்து கொள்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.