India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் அருகே வடகாட்டில் இன்று புதிய ஊராட்சி அலுவலக கட்டடத்தை திறந்து வைத்த பின் அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ரேஷன் கடைகளில் இம்மாதம் முதல் கூடுதல் கோதுமை வழங்கப்படும் என்றும், தமிழ்நாட்டுக்கு 25,000 மெட்ரிக் டன் கோதுமை வழங்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்தோம் எனவும் அவர் கூறினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் whatsapp ஸ்டேட்டஸ், story, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அச்சுறுத்தும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும், பொதுமக்களுக்கு இடையூறாக பதிவிடும் நபர்களை போலீசார் கண்காணித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று நண்பகல் வேளையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்தது , குறிப்பாக ஏரி சாலை, அண்ணா சாலை , காந்திநகர், பேருந்து நிலையம் , கான்வென்ட் ரோடு ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கடந்த தினங்களாக கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது.
கோபால்பட்டி அருகே பைக் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் நத்தம் பகுதியைச் சேர்ந்த தினகரன்,பாலாஜி, பிரவீன் ஆகிய 3கல்லூரி மாணவர்கள் பலியாகினர்.இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி,சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன் குணசேகர் ஆகியோர் வழக்கு செய்து விசாரிக்கின்றனர்.விபத்து நடந்த பகுதியில் வேகத்தடை அமைக்க கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோபால்பட்டியை அடுத்த கணவாய்பட்டி பகுதியில் இருசக்கர வாகனம் மீது கண்டெயினர் லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வேலம்பட்டி சேர்ந்த பாலாஜி உள்ளிட்ட 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். நத்தம் அசோக்நகரை சேர்ந்தவர் தினகரன் (20) என்பவர் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல்: சீலப்பாடி அருகே உள்ள அணைப்பட்டியை சேர்ந்தவர் பொன்ராம். இவரது மனைவி பாண்டியம்மாள்(50). இவர் இன்று காலை தனது மகனுடன் சீலப்பாடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது வேகத்தடையில் ஏறி இறங்கிய போது தவறி கீழே விழுந்தார். இந்நிலையில் பின்னால் வந்த லாரி, பாண்டியம்மாள் மீது ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை அக்டோ ரில் துவங்கி டிசம்பர் வரை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக அரசு TN-Alert என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், அடுத்த 4 நாட்களுக்கு வானிலை, நீர்த்தேக்கங்களில் தற்போதைய நீர் இருப்பு, தங்களது இருப்பிடம் வெள்ள அபாயத்திற்கு உட்பட்டதா போன்ற தகவல்களை அறியலாம். மேலும், மழைப்பொழிவு, இயற்கை இடர்பாடுகள் குறித்த புகார்களையும் பதிவு செய்யலாம்” என திண்டுக்கல் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கு மதிப்பீட்டு முகாம், தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் (7.10.2024) அன்று நடைபெற உள்ளது. உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுதிறனாளிகள் ஆதார் அட்டை நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, போட்டோ-2 மற்றும் UDID கார்டு நகல் ஆகிய ஆவணங்களுடன் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
நிலக்கோட்டை என்.ஊத்துப்பட்டியைச் சேர்ந்த தம்பதியினர் மகாராஜன் – அபிநயா. அபிநயா நேற்று முன்தினம் பிரசவத்திற்காக மட்டப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. 1 மணி நேரத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண்ணை விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில்களுக்கு பயன்படுத்திக் கொள்ள இலவசமாக எடுத்துச் செல்ல இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
பருவமழை காலம் துவங்கும் முன்னர், விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் இணையதளம் (tnesevai.tn.gov.in) வாயிலாக விண்ணப்பித்து, இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.