India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பழனியில் கல்லூரி மாணவர்களுக்கு வடை கொடுத்து திமுக மாணவர் அணியினர் இன்று பிரச்சாரம் மேற்கொண்டனர். மோடி வாயால் வடை சுட்டு 10 ஆண்டு காலம் ஆட்சி நடத்தினார். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது எனக் கூறி இந்தியா கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். மாணவரணி நிர்வாகிகள் பிரேம், சரவணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் நத்தம்ரோடு பாலமரத்துபட்டி பகுதியை சேர்ந்தவர் பால் வியாபாரி மூர்த்தி (32). இவரை நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த மூர்த்தி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தாலுகா போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 767 புகாா்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. அதில் பணப் பரிவர்த்தணை தொடர்பாக 7,வாக்காளர் பட்டியல் தொடர்பாக 692, தேர்தல் விதி மீறல் தொடர்பாக 61,இதர புகார்கள் 7 என மொத்தம் 767 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேடசந்தூர் பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு நேற்று தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் மற்றும் கிராம அலுவலர் இறந்தவரின் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் செலவினங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாநில தேர்தல் செலவு கணக்கு சிறப்பு பார்வையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில்,
மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான பூங்கொடி மற்றும் தேர்தல் செலவின கணக்கு பார்வையாளர் ஜரோன்தே விஷால் தஷ்ரத் ஆகியோர் முன்னிலையில் (ஏப்ரல்-15) இன்று நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ள முன்னாள் படைவீரர்கள் சீலப்பாடி(திருச்சி சாலையில் அமைந்துள்ள ) ஆயுதப்படை மைதானத்தில் தங்களது அடையாள அட்டை மற்றும் படை விலகல் சான்றுடன் ஏப்ரல் 17ஆம் தேதி காலை 9 மணிக்கு நேரில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஆட்சியர் பூங்கொடி வெளியிட்டார்.
பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்த்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது.
பாஜக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து திண்டுக்கல் தொகுதியில் பிரச்சாரம் செய்ய அவரது கட்சியைச் சேர்ந்த நிறுவனத் தலைவர் ராமதாஸ் மாநில தலைவர் அன்புமணி கவுரவத் தலைவர் கோ . க. மணி உள்ளிட்ட யாரும் இதுவரை வரவில்லை. பிரச்சாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், திலகபாமா தனித்து விடப்பட்டதாக கூறப்படுகிறது.
திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விரைவு மகிளா நீதிமன்றத்தில் உள்ள 2-வது மாடியில்
இருந்து விசாரணைக்காக வந்த கைதி திருமூர்த்தி என்பவர் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருமூர்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செங்குளம் பிரிவு அருகே இன்று ஆட்டோவும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. இதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அவர் நத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.