India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு இன்று(ஏப்.17), இந்து மக்கள் எழுச்சி பேரவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர் போராட்டத்தில் ஈடுபட்டார். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வலியுறுத்தி வேட்பாளர் மற்றும் தொண்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி அங்கிருந்த காவலர்கள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
மக்களவை பொதுத்தேர்தல் 2024ஐ முன்னிட்டு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 126ன் கீழ் இன்று(ஏப்.17) மாலை 6.00 மணி முதல், வாக்குப்பதிவு முடிவடையும் 19ம் தேதி மாலை 6.00 வரை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குப்பதிவு முடிவடைவதற்கு 48 மணி நேரத்திற்கு முந்தைய கட்டுப்பாடுகளை கடைப்பிடித்திட வேண்டும்; இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான பூங்கொடி அறிவுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையத்தில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று 17.04.2024 மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பூங்கொடி தலைமையில் கணினி வாயிலாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி மத்திய தேர்தல் பொது பார்வையாளர் பிரபுலிங் கவாலி கட்டி முன்னிலையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள அகதிகள் முகாமில் குடிபோதையால் ஏற்பட்ட தகராறு காரணமாக நாகராஜ் என்பவர், ஆனந்தன் என்பவரின் கழுத்தை நெறித்து இன்று கொலை செய்தார். வத்தலகுண்டு போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகராஜ் திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் மாவட்ட காவல்துறையினருடன் கேரளா போலீசார், மத்திய பாதுகாப்பு படையினர் உட்பட்ட 4000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் பொதுமக்கள் தேர்தல் அவசர புகார் குறித்து 8525852636 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். புகார் குறித்து 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு இலட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 2024 ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழாவின் 2 ஆம் நாளான நேற்று சுவாமி சிம்ம வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பழனி ரெணகாளியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா இன்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சாமி சாட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெற்றன. ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை சித்திரை திருவிழா நடைபெற உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 18,77,414 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்யவுள்ளனர். மாவட்டத்தில் பாராளுமன்ற பொது தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மற்றும் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள 11 ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு வாக்குப்பதிவு செய்யலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான பூங்கொடி தெரிவித்துள்ளார்.
நத்தம் அருகே உள்ள சிறுகுடியில் முகமது முபாரக் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “இந்தியாவில் 10 ஆண்டுகள் ஆண்ட பாஜக, நாட்டு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஒரு சவரன் நகை ஒரு லட்சமாக உயர வாய்ப்புள்ளது” என கூறினார்.
பச்சளநாயக்கன்பட்டி கிராமத்தில் பாமக வேட்பாளர் திலகபாமா இன்று விவசாயிகளை சந்தித்தார். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. விளை பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வெற்றி பெற்றால் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக கூறி வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில், பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.