India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், இணையதளத்தில் பல போலியான முதலீடு செயலிகள் (Investment Apps) உள்ளது. அவற்றில் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் எடுக்கலாம் என ஆசையை தூண்டி நம்மிடம் உள்ள பணத்தை பறிக்க வாய்ப்புள்ளது. எனவே, இது தொடர்பான புகார்களுக்கு Cyber Crime Help Line: 1930 Website: www.cybercrime.gov.in தெரிவிக்கலாம்.
நத்தம் அருகே பரளி-தேத்தாம்பட்டியை சேர்ந்த தம்பதியினர் ராமர் (37) – பொன்னம்மாள் (30). நேற்று முன்தினம் பொன்னம்மாள் தனது 1 வயது குழந்தையுடன், வீட்டின் அருகே விறகு அடுப்பு வைத்து சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அதில் இருந்த சுடு தண்ணீர் அருகில் இருந்த குழந்தை மீது கொட்டியது. இதில் குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (12.10.2024) மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பிரதீப், தலைமையில் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர், அனைத்து உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
விஜயதசமி தினத்தை முன்னிட்டு பழனி கோதைமங்கலத்தில் வில்-அம்பு எய்து நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பழனி கோவிலில் இன்று காலை 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதி. பிற்பகல் 2 மணியளவில் கோவில் நடை அடைக்கப்பட்டு, மீண்டும் நாளை அதிகாலை வழக்கம் போல திருக்கோவில் திறக்கப்படும் என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (அக்.12) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மழையால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன் பாதுகாப்புடன் செல்வது நல்லது. SHARE IT.
மதுரை பீ.பி.குளத்தை சேர்ந்தவர் இம்மானுவேல். இவரது மகன் ஜோயல் (24). இவர் நேற்று தனது காரில் நத்தம் வந்து விட்டு ஊருக்கு திரும்பினார். மதுரை- நத்தம் 4- வழிச்சாலையில் உள்ள கல்வேலிபட்டி பிரிவு பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது. காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. ஜோயலுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 163.90 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள கண்மாய், குளங்களில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இடை விடாமல் பெய்து வந்த மழையால், தாழ்வான பகுதி வீடுகளில் கழிவுநீருடம் மழைநீர் புகுந்தது. இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த பாதிப்பு அடைந்தனர். மேலும், அடுத்த 3 நாள்களுக்கு மழை இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பீன்ஸ் விலை அதிகரித்து கிலோ ரூ.50 க்கு விற்றது. இம்மாதம் துவக்கத்தில் பல இடங்களில் அறுவடை மும்முரமாக இருந்ததால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்து கிலோ ரூ.30க்கு விற்பனை ஆனது. சில நாட்களாக விளைச்சல் குறைய வரத்து குறையத் தொடங்கியது. இதன் காரணமாக பீன்ஸ் விலை அதிகரித்து கிலோ ரூ.50-க்கு விற்பனை ஆனது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. 65 அடி உயரம் கொண்ட பாலாறு –பழனி அருகே உள்ள பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் 49 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 75 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து 9 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் பெய்த மழையின் அளவு 50 மிமீ ஆக பதிவாகி உள்ளது.
ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்கள் அரசு விடுமுறை அளித்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்லில் உள்ள திரையரங்குகளில் இன்று உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், சரவணகுமார், முருகன் உள்ளிட்ட குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். மேலும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினர்.
Sorry, no posts matched your criteria.