India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த ராஜேஷ் என்ற வாலிபரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவர் எங்கிருந்து ரேஷன் அரிசி வாங்குகிறார் என்றும், இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் இரவு முழுவதும் தண்ணீர் தேங்கிய பகுதிகளை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் இன்று திண்டுக்கல்லில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல்லில் மழை விபரங்களை அறிய மாவட்ட நிர்வாகம் சார்பில் தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை: திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம்- 0451-1077, நிலக்கோட்டை – 04543-233631, நத்தம் – 04544-244452, ஆத்தூா் – 0451-2556212, பழனி – 04545-242266, ஒட்டன்சத்திரம் – 04553-241100, வேடசந்தூா் – 04551-260224, குஜிலியம்பாறை – 04551-290040, கொடைக்கானல் 9445000585 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
நத்தம் செந்துறையை அடுத்த ரெங்கை சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்த பெரியம்மாள்(65) என்பவரை கடந்த 2023 ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த, சரவணகுமார் (20) என்பவரை நத்தம் போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர். இவ்வழக்கில் திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் சரவணகுமாருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்து இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல், நாளை காலை 6.00 மணி வரை முருகன் DSP, PEW, திண்டுக்கல் தலைமையில் காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில்
இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெற http://socialjustice.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர்
பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் 23.10.2024 அன்று செயல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் 16.10.2024 அன்று மனுக்கள் பெறப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அரசு உதவிகளை இத்திட்டத்தின் கீழ் மனு அளித்து பயன்பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 172 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவுறுத்தினார். உடன் அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.
மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் கால்நடை மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்வதற்காக பழனி முருகன் கோவிலுக்கு இன்று வந்தார். அடிவாரத்தில் இருந்து மின் இழுவை ரயில் வழியாக மலைக்கோவில் சென்ற அவர் உச்சிக்கால பூஜையில் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தார்.
திண்டுக்கல் மாவட்ட பொதுமக்கள் மழை பாதிப்பு மற்றும் மழை தொடர்பான உதவிகள் குறித்து, கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார். மேலும், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தயார் நிலையில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் அரக்கோணத்தில் இருந்து தயார் நிலையில் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.