India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகம் சார்பில் துணிப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் பொருத்தபட்டுள்ளது இதில் 10 ரூபாய் நாணயம் செலுத்தி மஞ்சள் பைகளை பொதுமக்கள் பெற முடியும். இந்த இயந்திரமானது சமீபத்தில் சில நாட்களாக செயல்படாமல் இருந்தது. இந்நிலையில் இயந்திரம் பழுது நீக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.
பழனி அடுத்த பாப்பம்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து இரவு நேரத்தில் விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சாரம் மிகக் குறைவாக வழங்கப்படுவதால் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். மின்சார வாரிய அலட்சியப் போக்கால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு உழவர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக குற்றம் சாட்சி வருகின்றனர்..
பழனி அருகே பழைய ஆயக்குடியை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி மீனா. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மீனாவின் தாய் மாமனான ஜெகதீஸ்வரன் வீட்டில் மீனா வசித்து வருவதால், ராம்குமார் கோபத்தில் இருந்துள்ளார். நேற்று காலை ஜெகதீஸ்வரனை வழிமறித்த ராம்குமார் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து வெட்டியதில் பலத்த காயமடைந்தார்.
திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் உள்ள திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இன்று (ஏப்ரல்.23) சித்ரா பௌர்ணமி முன்னிட்டும், கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகளால் பூக்கள் வரத்து குறைவானதால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூபாய் 1500 வரை விற்பனையாகிறது. மேலும் மாலைக்கு கட்டும் பூவான சம்பங்கி, செவ்வந்தி போன்ற பூக்கள் ரூபாய் 250 வரை விற்பனை ஆகிறது.
கொடைக்கானலில் கடைக்கோடியில் உள்ளது வட்டக்கானல் அருவி. இந்த அருவி அருகே டால்பின் நோஸ் பகுதியும் உள்ளது. இதில் எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் கொடுக்க முடியாத நிலை உள்ளது. வட்டக்கானல் பகுதியில் பயணிகள் வரும் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி இல்லாத சூழலில் ரோட்டோரமே நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.36.16 லட்சத்துக்கு, பழனி கோயில் சாா்பில் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது. இதில் ஒரு மூட்டை சா்க்கரை ரூ.2,510 முதல் ரூ.2,600 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் ரூ.36.16 லட்சத்திற்கு 20 கிலோ கரும்பு சா்க்கரை பழனி கோயில் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவிலுக்கு அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் அவ்வப்போது வந்து தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பழனி கோயிலுக்கு வருகை தந்து முருக பெருமானை தரிசனம் செய்தார். முன்னதாக அடிவாரத்தில் ரோப் கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல், பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஓய்வு பெற்ற காவலர் மாணிக்கம்(59) என்பவர்; திண்டுக்கல்லில் இருந்து சேலம் செல்லும் சரக்கு ரயிலில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒட்டன்சத்திரம் தாலுகா, இடையகோட்டை அருகில் உள்ள இ. அய்யம்பாளையத்தில் உள்ள பாலமுருகன் கோயிலில் இன்று சித்ரா பௌர்ணமி பூஜைக்காக 108 -சங்கு பூஜை நடைபெற்றது. அப்போது அங்கு வட்டமடித்து சுற்றிக் கொண்டிருந்த மயில் கோவில் வளாகத்திற்குள் வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக அமர்ந்து இருந்தது. இதனை கண்ட பக்தர்கள் முருகனின் வாகனம் மயில் என்பதால் பக்தி பரவசம் அடைந்தனர்.
பழனி அருகே ஆயக்குடியில் இன்று அதிகாலை பால் வியாபாரத்திற்கு சென்ற ஜெகதீசன் என்பவர் மீது கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளது. குடும்பத்தகராறு காரணமாக உறவினர் ராம்குமார் என்பவர் ஜெகதீசனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியதாக தெரிகிறது. ஜெகதீசனை மீட்டு ஆபத்தான நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆயக்குடி போலீசார் விசாரிக்கன்றனர்.
Sorry, no posts matched your criteria.