Dindigul

News November 2, 2024

கந்தசஷ்டி விழாவிற்காக சென்ற யானை

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்குகிறது. இந்த கந்தசஷ்டி விழாவிற்காக கோவில் யானை கஸ்தூரி மலைக்கோவில் சென்றது. 7 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் 6-ம் நாளில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. விழாவில் 8-ம் தேதி பழனி கோவிலில் சண்முகர் வள்ளி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

News November 2, 2024

திண்டுக்கல்லில் கனமழைக்கு வாய்ப்பு!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் நேற்று பழனி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

News November 1, 2024

திண்டுக்கல் தலைப்புச் செய்திகள்

image

1.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்குகிறது.
2.திண்டுக்கல் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை
3.திண்டுக்கல்: விழிப்புணர்வு புகைப்படம் வெளியீடு
4.தலையூத்து அருவியில் தர்ப்பணம் செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி
5.திண்டுக்கல்லில் ரயில்களில் 30 ஆயிரம் பேர் பயணம்
6.அனுமந்தராயன் கோட்டை நீர்நிலைகள் நிரம்பியது

News November 1, 2024

திண்டுக்கல் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

பருவமழை தொடங்கி உள்ள நிலையில், இன்று 28 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News November 1, 2024

திண்டுக்கல்: விழிப்புணர்வு புகைப்படம் வெளியீடு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் விழிப்புணர்வு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், (ஆன்லைனில் வாகனங்கள் வாங்குபவர்கள் வாகனத்தை நேரில் பார்த்து ஆவணத்தை சரிபார்த்த பின் வாங்கவும்) என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு புகைப்படத்தை இன்று சமூக வலைதள பக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

News November 1, 2024

தலையூத்து அருவியில் தர்ப்பணம் செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி

image

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, சத்திரப்பட்டி அருகே அமைந்துள்ள தலையூத்து அருவியில் தற்பொழுது விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆபத்தான இந்த அருவியில் குளிக்க வருவதால் வனத்துறை பொதுமக்கள் பாதுகாப்பை கருதி இன்று இதனில் நுழைவாயில் கதவை மூடியுள்ளது. கோவிலுக்கு வருபவர்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.

News November 1, 2024

திண்டுக்கல்: விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

image

திண்டுக்கல் வனவியல் விரிவாக்க கோட்டத்தின் மூலம் திண்டுக்கல் மாநகராட்சி, ஒட்டன்சத்திரம் நகராட்சி, பழனி நகராட்சி, பட்டிவீரன்பட்டி, தாடிக்கொம்பு ஆகிய டவுன் பஞ்சாயத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் சுற்றளவுக்குட்பட்ட கிணறு, ஆழ்துளை கிணறு பாசன வசதி உடைய விவசாயிகளுக்கு வனத்துறை மூலம் TBGPCCR- திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மரக்கன்று இலவசமாக வழங்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.

News October 31, 2024

திண்டுக்கல்: இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று கொடைக்கானல் காவல்துறை கண்காணிப்பாளர் பானுமதி அவர்கள், காவல்துறை துணை கண்காணிப்பாளர் கண்ணன் (DCB )- அவர்கள் தலைமையில் திண்டுக்கல், கொடைக்கானல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய இடங்களில் இரவு ரோந்து பணி அலுவலர்களும் அவர்களது தொலைபேசி எண்களையும் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அவசர உதவிக்கு பொதுமக்கள் அழைக்கலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.

News October 31, 2024

திண்டுக்கல் தலைப்புச் செய்திகள்

image

1. திண்டுக்கல்லில் கனமழை பெய்யக்கூடும்
2. நத்தத்தில் வீட்டில் வெடிகள் வெடித்து விபத்து
3. கறிக்கடைகளில் அலைமோதிய கூட்டம்
4. விற்பனை கூடங்களில் கொப்பரைக் கொள்முதல்
5. கொடைக்கானல் அருவிகளில் தண்ணீர் ஆர்பரிப்பு
6. தீபாவளியை ஆனந்தமாக கொண்டாடிய மக்கள்
7. விருப்பாட்சி தலையூத்து அருவியில் குளிக்க தடை

News October 31, 2024

திண்டுக்கல்: விற்பனை கூடங்களில் கொப்பரைக் கொள்முதல்

image

பழனி, வத்தலகுண்டு, நத்தம், கோபால்பட்டி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் டிச.9ஆம் தேதி வரை கொப்பரைக் கொள்முதல் செய்யப்பட உள்ளது. விவசாயிகள் நில உரிமைக்கான அசல் சிட்டா, அடங்கல், ஆதாா் எண், வங்கிக் கணக்குப் புத்தக நகலை கொள்முதல் மையங்களில் சமா்ப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் பூங்கொடி தெரிவித்துள்ளாா்.