India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில், சமூக வலைதளத்தில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் நட்பு கொள்வதை தவிர்க்கவும். அவர்கள் போலியான நபர்களாக இருக்கலாம் என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை நேற்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல், நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
1. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் 2ஆம் நாள் கந்தசஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
2.திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்
3.பித்தளைப்பட்டியில் பொழிந்த கனமழை
4.திண்டுக்கல்லில் தொடர் வாகன திருட்டு ஈடுபட்ட 4 பேர் கைது
5.வேடசந்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று (முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ கால் அழைப்புகளை ஏற்க வேண்டாம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம்,சிவகங்கை, விருதுநகர்,தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில் தென் தமிழக கடலோரம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால் திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய கன மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வெல்லம்பட்டி கிராம எல்லைக்குட்பட்ட கருப்பணம்பட்டி கிராமத்தை சேர்ந்த பிச்சை ராஜ் என்பவது மகன் பழனிமுத்து என்பவருக்கு சொந்தமான பசுமாடு மின்னில் தாக்கி இறந்துள்ளது. வேடசந்தூர் பகுதியில் மின்னல் தாக்கி அடுத்தடுத்து இரண்டு மாடுகள் இறந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
2.வரதாபட்டினம் பகுதியில் கொம்பன் யானை நடமாட்டம்!
3.திண்டுக்கல் மாவட்டத்தில் கல்லறை திருநாள் நடைபெற்றது.
4.திண்டுக்கல்லில் டூவீலரில் நிலை தடுமாறி கீழே விழுந்து பள்ளி மாணவன் பலி
5.திண்டுக்கல் மாவட்டத்தில் 66 மிமீ மழை பதிவு
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் மாறி மாறி கடுமையாக தாக்கிக் கொண்டனர் இதுகுறித்து பழனி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு அடிதடியில் ஈடுபட்ட வெள்ளையன் (எ) தினேஷ் அப்புகுட்டி (எ) பிரபாகரன் ஆகிய இரண்டு பேரின் கால் ஒடிந்த நிலையில் 8 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, வத்தலகுண்டு அருகே உள்ள மல்லனம்பட்டியை சேர்ந்தவர் ராமு. இவரின் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் அவரது மனைவி சசிகலா, மகன் தேவா ஆகியோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வத்தலக்குண்டு போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்குகிறது. இந்த கந்தசஷ்டி விழாவிற்காக கோவில் யானை கஸ்தூரி மலைக்கோவில் சென்றது. 7 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் 6-ம் நாளில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. விழாவில் 8-ம் தேதி பழனி கோவிலில் சண்முகர் வள்ளி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.