Dindigul

News November 20, 2024

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், அவர்கள் தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களின் தீர்வு காணப்படாத புகார் மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

News November 20, 2024

திண்டுக்கல்: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (அவசர ஊர்திக்கு வழி விடுவோம், உயிரை காப்போம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News November 20, 2024

திண்டுக்கல்: மாடு வளர்ப்பாளர்களுக்கு கவனத்திற்கு

image

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் (ம) வாகன ஓட்டிகளுக்கு தொல்லை தரும் வண்ணம் மாடுகளை சாலைகளில் திரிய விட்டால் மாடுகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். முதல் முறை பிடிபட்டால் மாடு ஒன்றிற்கு ரூ.2000மும், 2ஆம் முறை ரூ.5000மும் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் திரிய விட்டால் மாடுகள் திருப்பி வழங்கப்படாது என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

40 நாட்களுக்குப் பிறகு ரோப்கார் சேவை துவக்கம்

image

ஆறுபடை வீடுகளின் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். மலைக்கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்ய ரோப்கார் மூலமாக பக்தர்கள் செல்வார்கள். 40 நாட்கள் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து, தற்போது சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் ரோப்கார் சேவை துவக்கப்பட்டது.

News November 20, 2024

எண்மத் தொழில் நுட்ப பயிர் கணக்கீடு: திண்டுக்கல் 1 இடம்

image

வேளாண் கல்லூரி மாணவர்கள் துணையுடன் நடத்தப்பட்ட எண்மத்தொழில்நுட்ப பயிர்க் கணக்கீட்டில் திண்டுக்கல் 1 இடம் பிடித்துள்ளது. திண்டுக்கல்லில் நடத்தப்பட்ட கணக்கீட்டுப் பணியில் 14.33 லட்சம் உள்பிரிவுகளில் 100 சதவீதம் நிறைவு செய்தது. மாநில வாரியாக வேளாண்மை சாகுபடி பரப்பை மதிப்பீடு செய்து, அதன்படி வேண்டிய கட்டமைப்பு பணிகளுக்கு இந்த எண்மத் தொழில்நுட்பப் பயிர் கணக்கீட்டை நடத்த மத்திய அரசு அறிவுறுத்தியது.

News November 20, 2024

பழனியில் ரோப்கார் சேவை தொடக்கம் 

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் ரோப் கார் சேவை வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிவுற்று நாளை முதல் இயக்கப்படும் என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இன்று காலை 9 மணிக்கு மேல் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. 

News November 20, 2024

பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு

image

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டம், ஆலம்பாடி கிராமம், எஸ்.ஜி.கிரானைட்ஸ் பல வண்ண கிரானைட் சுரங்கம் அமைவதற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது தொடர்பாக பொதுமக்களின் கருத்து கேட்டறியும் கூட்டம் கலெக்டர் தலைமையில் நவ.22 அன்று 11 மணிக்கு ஆலம்பாடி ஊராட்சி, சமுதாயக் கூடத்தில் நடைபெற  இருந்தது. இந்நிலையில் கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது என ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

திண்டுக்கல்லில் இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல், நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

News November 19, 2024

திண்டுக்கல்: இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று ஒருநாள் இலவச அனுமதி ➤பழனி அருகே விபத்து: சிசிடிவி ➤திண்டுக்கல் மாவட்டத்திற்கு மழை அறிவிப்பு ➤திண்டுக்கல்: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை ➤வேடசந்தூர் குடகனாறு அணை திறப்பு ➤ 2 லட்சம் கேட்கும் அதிகாரிகள்: குமுறும் பயனாளிகள் ➤வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை ➤வெள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் ➤விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

News November 19, 2024

சுற்றுலா பயணிகளுக்கு இன்று ஒருநாள் இலவச அனுமதி

image

திண்டுக்கல் என்றவுடன் ஞாபகம் வருவது கமகமக்கும் பிரியாணியும், பூட்டும் மட்டுமல்ல மலைக்க வைக்கும் மலைக்கோட்டையும் தான். இந்நிலையில் இன்று உலக பாரம்பரிய வார விழாவை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் மலைக்கோட்டைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்காமல் இலவசமாக அனுமதி வழங்கப்பட்டது. இதனால் திண்டுக்கல் நகரை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் மாலை நேரத்தில் குவிந்தனர்.

error: Content is protected !!