Dindigul

News November 21, 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த மழை அளவு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (20.11.24) காலை 8 முதல் இன்று (21.11.24) காலை 8 மணி வரை திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பெய்த மழையின் அளவு வெளியாகியுள்ளது. இதில் திண்டுக்கல் தாலுகா ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், பழனி, கொடைக்கானல், குஜிலியம்பாறை, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் இன்று காலை வரை பெய்த மழையின் அளவு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

News November 21, 2024

BREAKING: ஊசி போட்ட பெண் உயிரிழப்பு

image

திண்டுக்கல், கொடைக்கானலில் தனியார் மருந்தகத்தில் ஊசி போட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரியதர்ஷினி என்பவருக்கு 20 நாளுக்கு முன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் தனியார் மருந்தகத்தில் ஊசி போட்ட நிலையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

News November 21, 2024

பழனியில் திருமாவளவன் சாமி தரிசனம் 

image

பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெற விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில தலைவர் தொல்.திருமாவளவன் பழனிக்கு வருகை தந்தார். அப்போது பழனி முருகன் கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு கொடுத்து கோவில் பிரசாதங்கள் அவருக்கு வழங்கப்பட்டன. அவருடன் ஏராளமான விசிக தொண்டர்கள் பங்கேற்றனர்.

News November 21, 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த மழை அளவு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (20.11.24) காலை 8 மணி முதல் இன்று (21.11.24) காலை 8 மணி வரை பெய்த மழையின் அளவு வெளியீடு மேலும் திண்டுக்கல் தாலுகா, திண்டுக்கல் மேற்கு, நத்தம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, கொடைக்கானல் உள்ளிட்ட திண்டுக்கல் தாலுகா முழுவதும் பெய்த மழை பெய்தது.

News November 21, 2024

திண்டுக்கல்லில் டெங்கு காய்ச்சல்

image

ஆத்தூர், பெரும்பாறை பகுதியை சேர்ந்த 13வயது மாணவி உட்பட இருவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்ததை தொடர்ந்து இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்த பொது, அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இருப்பிடத்தை கண்டறிந்து அப்பகுதி முழுவதும் கொசுமருந்து தெளித்தும், மாணவியின் பள்ளிக்கும் சென்று கொசு மருந்து அடித்து டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

News November 21, 2024

திண்டுக்கல் அருகே விபத்து 3 பேர் பலி

image

திண்டுக்கல் அருகே சித்தரேவை சேர்ந்தவர் ராமசாமி, கன்னிவாடி செங்கட்டாம்பட்டி பகுதி வனக்காப்பாளராக பணியாற்றி வந்தார். போடியை சேர்ந்த உறவினர் அருண்பாண்டி, இவரது வீட்டில் தங்கி படித்து வந்தார். நேற்று இரவு ராமசாமி தன் டூ-வீலரில் ஹெல்மெட் அணியாமல், அருண்பாண்டி அவருடன் படிக்கும் அரவிந்த் பாண்டி, ஆகியோருடன் திண்டுக்கல்-குமுளி சாலையில் வந்தார். அப்போது எதிரே வந்த லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

News November 21, 2024

ஆவணங்களின்றி வந்த 3 தனியார் பள்ளி பஸ்கள் பறிமுதல்

image

திண்டுக்கல் பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் கொடைக்கானல் டூ வத்தலக்குண்டு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முறையான ஆவணங்களும் இல்லாமல் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த 3 தனியார் பள்ளி பஸ்களை போக்குவரத்து பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ.3.5 லட்சம் அபராதம் விதித்தனர்.

News November 21, 2024

ஒட்டன்சத்திரம் மார்க்கெட் கடை ஏலம் ஒத்திவைப்பு

image

நவ.21ஆம் தேதி அன்று நடைபெற இருந்த ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் கடைகள் மற்றும் இதர இனங்களுக்கான முன் ஒப்பந்தப்புள்ளி மற்றும் முன் பொது ஏலம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகிறது. மேற்கண்ட முன்பொது ஏலம் மற்றும் முன் ஒப்பந்தப்புள்ளி 22.11.2024 அன்று நடைபெறும் என ஒட்டன்சத்திரம் ஆணையர் தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் 

image

இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் இருக்கும் காவலர்களின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் தொடர்பு கொள்ளவும். திண்டுக்கல் நகரம், திண்டுக்கல் ஊரகம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளன.

News November 20, 2024

திண்டுக்கல்: இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ➤திண்டுக்கல்: மாடு வளர்ப்போர் கவனத்திற்கு ➤நியாய விலைக்கடையில் ஆய்வு செய்த கலெக்டர் ➤இரவில் உலா வந்த 3 இளைஞர்கள்! வெளியான CCTV ➤அருள் இறங்கி ஆடிய கல்லூரி மாணவி ➤40 நாட்களுக்குப் பிறகு ரோப் கார் சேவை தொடக்கம் ➤எண்மத் தொழில் நுட்ப பயிர் கணக்கீடு: திண்டுக்கல் முதலிடம் ➤பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு.

error: Content is protected !!