Dindigul

News November 5, 2024

குழந்தையின் நுரையீரலில் இருந்த எல்.இ.டி. லைட் அகற்றம் 

image

திண்டுக்கல்லை சேர்ந்த 8 மாத குழந்தையின் நுரையீரலில் சிக்கியிருந்த ரிமோட் கண்ட்ரோல் காரின் எல்.இ.டி. லைட்டை வெற்றிகரமாக அகற்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்தனர். பிராங்கோஸ்கோப்பி நுரையீரல் அகநோக்கி மூலம் குழந்தையின் இடது பக்க நுரையீரலில் சிக்கி இருந்த ரிமோட் கண்ட்ரோல் கார் எல்.இ.டி. லைட் அகற்றம் செய்யப்பட்டது.

News November 5, 2024

தேவையற்ற செயலிகளை பதிவிறக்க வேண்டாம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் இணையதளம் வாயிலாக பொதுமக்களுக்கு தினந்தோறும் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று சமூக வலதளப் பக்கத்தில் இணையதளத்தை பயன்படுத்தும் போது வரும் தேவையற்ற செயலிகளை (Apps) பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அதன் மூலம் உங்கள் தகவல் திருடப்படலாம். குறித்த புகாருக்கு சைபர் குற்றவியல் உதவி வழி: 1930 இணையதளம்: www.cybercrime.gov.in புகார் தெரிவிக்கலாம். 

News November 5, 2024

பெண் போலீஸ் உடலுக்கு 24 குண்டு முழங்க மரியாதை

image

மேல்மருவத்தூர் அருகே விபத்தில் உயிரிழந் பெண் காவலர் நித்யா திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் இன்று நித்யாவின் உடல் வேடசந்தூருக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் வேடசந்தூரில் எரியூட்டப்பட்டது. இதில் போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

News November 5, 2024

திண்டுக்கல்: அதிர்ச்சி அளித்த ஆர்டிஐ தகவல்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 170 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில், 93 பள்ளிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 30 பள்ளிகளில் மைதானங்கள் இல்லை. திண்டுக்கல், கொடைரோடு பகுதியைச் சேர்ந்த ரதிஷ் பாண்டியன் என்பவர் ஆர்டிஐ மூலம் கேட்ட கேள்விக்கு திண்டுக்கல் பள்ளிக் கல்வித் துறை இவ்வாறு பதிலளித்துள்ளது.

News November 5, 2024

திண்டுக்கல்லில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

image

திண்டுக்கல் கனரா வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் பெண்களுக்கு முற்றிலும் இலவசமாக 30 நாட்கள் இலவச அழகு கலை பயிற்சி வரும் 16.11.2024 அன்று முதல் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த எட்டாம் வகுப்பு முதல் படித்த மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளது. வயது வரம்பு 18 முதல் 45 வரை. நேரம் காலை 9.30 முதல் 5.30- வரை. பயிற்சிக்கான உபகரணங்கள், உடை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

News November 4, 2024

திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல், நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

News November 4, 2024

திண்டுக்கல் இளைஞர்களே.. ராணுவத்தில் சேர அரிய வாய்ப்பு

image

இந்திய ராணுவத்தில் 174 ராணுவ வீரர்கள், 50 கிளார்க் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்ட இளைஞர்களுக்கு தேர்வு முகாம் நடைபெறும் நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தோருக்கு வரும் 7ஆம் தேதி தேர்வு முகாம் நடைபெற உள்ளதால் ராணுவத்தில் சேர ஆர்வம் உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 4, 2024

திண்டுக்கல்: 30 குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை 

image

கொடைரோடு அருகே ராஜதானிக்கோட்டை கிராமத்தில் கடந்த சில நாட்களில் 30க்கும் மேலான குழந்தைகள் வீடுகள் மற்றும் பள்ளிகளில் அடிக்கடி மயங்கிவிழுந்தனர். இதையடுத்து குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி உரிய சிகிச்சை அளிக்க ராஜதானிக்கோட்டை கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News November 4, 2024

பொதுமக்களிடமிருந்து 189 மனுக்களைப் பெற்ற ஆட்சியர்

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 189 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவுறுத்தினார்.

News November 4, 2024

திண்டுக்கல்: 30 குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை 

image

கொடைரோடு அருகே ராஜதானிக்கோட்டை கிராமத்தில் கடந்த சில நாட்களில் 30க்கும் மேலான குழந்தைகள் வீடுகள் மற்றும் பள்ளிகளில் அடிக்கடி மயங்கிவிழுந்தனர். இதையடுத்து குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி உரிய சிகிச்சை அளிக்க ராஜதானிக்கோட்டை கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.