India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்புள்ளது. இதனால், தமிழகத்தில் பல பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை இன்று(27.11.24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்புள்ளது. இதனால், தமிழகத்தில் பல பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. மக்களே உங்க பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் பண்ணுங்க
திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை இன்று இரவு 11.00 மணி முதல், புதன்கிழமை நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
1.பெத்தநாயக்கன்பட்டி ஆடுகளை கடித்து குதறிய தெருநாய்கள்
2.திண்டுக்கல் பெரியார் சிலைக்கு தமிழ்புலிகள் மரியாதை
3.வத்தலகுண்டு, தும்மலப்பட்டி தபால் அலுவலகத்தில் ரூ.51 லட்சம் மோசடி
4.பான் 2.0 – மத்திய அமைச்சரவை ஒப்புதல்
5.இந்திய அரசியலமைப்பு தினம் உறுதிமொழி ஏற்பு
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டி அருகே உள்ள பட்டியில் இன்று அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை கடித்து குதறிய தெரு நாய்கள் இன்று 15 குட்டிகளைக் கடித்துக் குதறியது.இதனால் 15 ஆட்டுக்குட்டிகள் இறந்தன. இதனால் அங்கு இரத்த காயங்களுடன் இறந்து கிடந்த ஆடுகளை பார்த்து ஆடுகளை வளர்ப்பவர் அழுததை பார்த்து அங்கு உள்ளோர் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கல்லூரிகளில் சந்தைப்படுத்துதலுக்காக நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 28-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி நடைபெறவுள்ளது. திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் இணையதளம் வாயிலாக பொதுமக்களுக்கு தினந்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று வீட்டில் இருந்து வேலை செய்து சம்பாதிக்கலாம் என செல்போனுக்கு வரும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். எச்சரித்துள்ளனர். மேலும் இது போன்ற புகார்களுக்கு சைபர் கிரைம் உதவி எண்: 1930 இணையதளம்: www.cybercrime.gov.in
திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (26.11.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், தலைமையில் “இந்திய அரசியலமைப்பு தினம் உறுதிமொழி” ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் அலுவலக அமைச்சு பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாநில பேரிடர் மீட்பு படையின் 6 குழுக்கள் திருச்சி, திண்டுக்கல் மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ளது. 2 குழுக்கள் சென்னை (ம) நெல்லை மாவட்டத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், தேவைக்கேற்ப சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உடனே அனுப்பி வைக்க மாநில பேரிடர் மீட்பு குழுவின் 9 குழு தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் நாகை, தஞ்சை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணிக்கு நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட உள்ளது. இதற்கு நேர்முகத் தேர்வு நேற்று முதல் தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளது. மொத்தம் உள்ள 63 பணியிடங்கள் நிரப்பபடவுள்ளது.
Sorry, no posts matched your criteria.