India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வங்கி கணக்கின் மூலம் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை செய்து உள்ளீர்கள் என உங்களது செல்போனிற்கு வரும் அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களை நம்பாதீர்கள். அதன் மூலம் உங்களை மிரட்டி பணம் பறிக்க வாய்ப்புள்ளது. என திண்டுக்கல் காவல்துறை சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள T.Pharm, B.PHARM சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதல் பெற்றவர்கள் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வரும் 5ஆம் தேதி வரை விண்ணப்ப காலம் நீட்டிப்பு செய்யப்படுள்ளது என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட பிராணிகள் வதை தடுப்புச்சங்க பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. அதில், அனைத்து வகையான விலங்கள் வேட்டையாடப்படுவதை தடுக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களில் ஆடு, மாடுகளை ஏற்றிச்செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல், நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
1.திண்டுக்கல் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
2.திண்டுக்கல்: password மற்றும் OTP -யை யாரிடமும் பகிர வேண்டாம் காவல்துறை எச்சரிக்கை
3.திண்டுக்கல் அருகே மழைநீரில் குளித்து போராட்டம்
4.ஒட்டன்சத்திரம்: முருங்கைக்காய் கிலோ ரூ.340க்கு விற்பனை
5.திண்டுக்கல் தொழிலதிபர் வீட்டில் ரெய்டு
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (‘உங்களது password மற்றும் OTP – யை யாரிடமும் பகிர வேண்டாம்) என்ற வாசகத்துடன் கொண்ட விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் பகுதியில் சீசன் முடியும் தருவாயில் இருப்பதால் மார்க்கெட்டிற்கு முருங்கை வரத்து மிகவும் குறைந்து போனது. உள்ளூர் கரும்பு முருங்கை கிலோ ரூ.180, செடி முருங்கை ரூ.150க்கு விற்பனையானது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் விளையும் முருங்கைக்காய் தரமாக இருப்பதால் அங்கிருந்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. அது கிலோ ரூ.340க்கு விற்பனையாகிறது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த தொழிலதிபர் ரத்தினம் என்பவரது வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை புதுக்கோட்டையில் பாஜக, அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து திண்டுக்கல்லிலும் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல், நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
1.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷ பூஜை நடைபெற்றது.
2.பாடகி மீது இந்து முன்னணி சார்பாக புகார்
3.கொடைக்கானல் ஏரியை உருவாக்கியவர் பிறந்ததினம் கொண்டாட்டம்
4.பாலாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
5.ஜாமினில் வந்து தலைமறைவானவர் கைது
Sorry, no posts matched your criteria.