Dindigul

News December 1, 2024

திண்டுக்கல் மாவட்டம் போலீஸ் ரோந்து விவரம்

image

இன்று திண்டுக்கல் மாவட்ட போலீஸ் ரோந்து விவரம் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர், ஆகிய பகுதிகளில் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் ரோந்து வருகின்றனர். அப்பகுதியில் ஏதேனும் பிரச்சனை இருப்பின் மேலே கொடுக்கப்பட்டுள்ள போன் நம்பரை தொடர்பு கொள்ளவும்.

News December 1, 2024

திண்டுக்கல் தலைப்புச் செய்திகள்

image

1.கொடைக்கானலில் மதுரை வாலிபர் தற்கொலை முயற்சி
2.திண்டுக்கல்லில் பயிர் காப்பீடு முகாம்
3.ஒட்டன்சத்திரம்: ஆட்சியர் ஆளுநருக்கு வரவேற்பு!
4.கொடைக்கானல் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு
5.ஜல்லிக்கட்டு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

News December 1, 2024

காந்திகிராமம் பல்கலை அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் பல்கலை., 38ஆவது பட்டமளிப்பு விழா 2025 ஜனவரியில் நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. 2023-2024 கல்வி ஆண்டுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள், டிச.,15க்குள் பல்கலையில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் பல்கலை தெரிவித்துள்ளது.

News December 1, 2024

திண்டுக்கல் : மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (தங்கள் வீடு மற்றும் பொது இடங்களில் குற்றங்களைத் தடுப்பதற்கும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கும் சிசிடிவி கேமிரா மிகவும் அவசியமான ஒன்றாகும்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News December 1, 2024

இந்தியத் தோ்தல் ஆணையா் கொடைக்கானலுக்கு வருகை

image

கொடைக்கானல், மன்னவனூர் பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களை இந்தியத் தோ்தல் ஆணையா் சுக்பிா் சிங் சந்து தனது மனைவியுடன் நேற்று பாா்த்து ரசித்தாா்.அப்போது, விஞ்ஞானி ராஜேந்திரனிடம் அங்கு வளர்க்கப்படும் ஆடுகள், முயல்கள் குறித்தும் கேட்டாா். இந்தியத் தோ்தல் ஆணையா் வருகையையொட்டி, இந்தப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

News December 1, 2024

கொடைக்கானலில் மதுரை வாலிபர் தற்கொலை முயற்சி

image

மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த அக்ஷய்குமார் (24). நேற்று மாலை டூவீலரில் கொடைக்கானல் வந்தவர் பெருமாள்மலை அருகே அரிவாளால் தனது கழுத்தை அறுத்து கொண்டார். ரத்த காயத்துடன் இருந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே வந்த போது ஆம்புலன்சிலிருந்து குதித்து ஓடினார். போலீசார் விசாரணையில் வேலை கிடைக்காததால் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தெரியவந்தது.

News December 1, 2024

திண்டுக்கல்லில் பயிர் காப்பீடு முகாம்

image

திண்டுக்கல்லில் ராபி பருவ பயிர் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் பயன் பெறும் வகையில், இன்று முதல் வரும் 7ஆம் தேதி வரை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் காப்பீட்டு நிறுவனம் சார்பில் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. மேலும் விண்ணப்ப கட்டண தொகையை செலுத்திய பின்பு அதற்கான ரசீதை பொது இ-சேவை மையங்கள், கூட்டுறவு சங்கங்களில் இருந்து பெற்றுக் கொள்ள கலெக்டர் பூங்கொடி அறிவுறுத்தியுள்ளார்.

News November 30, 2024

திண்டுக்கல் இரவு நேர ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல், நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

News November 30, 2024

திண்டுக்கல் தலைப்புச் செய்திகள்

image

1.திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று அமாவாசையை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
2.திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
3.நிரம்பி வழியும் நிலக்கோட்டை கண்மாய்
4.பழனி பஞ்சாமிர்தம் 4 கோடிக்கு மேல் விற்பனை!
5.வத்தலகுண்டு யானை தந்தம் வைத்திருந்த மூவர் கைது
6.காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி!

News November 30, 2024

பழனி பஞ்சாமிர்தம் 4 கோடிக்கு மேல் விற்பனை!

image

பழனி முருகன் கோவிலில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 கோடிக்கு மேல் பஞ்சாமிர்தம் அதிகமாக விற்பனையாகியுள்ளது. கடந்த வருடத்தில் 01.07.2023 முதல் 30.11.2023ம் தேதி முடிய மொத்தம் ரூ.11,49,87,540/-க்கு பஞ்சாமிர்தம் விற்பனையாகிய நிலையில் நடப்பு வருடத்தில் 01.07.2024 முதல் 30.11.2024ம் தேதி முடிய மொத்தம் ரூ.15,86,19,125/-க்கு பஞ்சாமிர்தம் விற்பனையாகி உள்ளது. தேவஸ்தான நிர்வாகம் தெரிவிப்பு.

error: Content is protected !!