India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (சீட்பெல்ட் அணிந்து பயணம் செய்வோம்.. விபத்தின் போது உயிரிழப்பை தவிர்ப்போம்..) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் உள்ள திப்பு சுல்தான் மணிமண்டபத்தை பராமரிக்கக் கோரி நத்தம் ஷேக் பரீத் ஒலி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் திப்பு சுல்தான் மணிமண்டபத்தை பராமரிக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் (07.12.2024) அன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திண்டுக்கல் எம்.வி.எம். அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் நடத்தப்படவுள்ளது. எனவே படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம் என கலெக்டர் மொ.நா.பூங்கொடி, தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மேற்கு தாலுகா கே.புதுக்கோட்டையில் கிராவல் மண் குவாரி தொடங்குவதற்காக, பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் ரெட்டியார்சத்திரம் தனியார் திருமண மண்டபத்தில் வரும் 10-ந்தேதி நடைபெற இருந்தது. இந்த கருத்து கேட்பு கூட்டம், நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்களை புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்து, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது. அதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு தற்போது அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 2 நாள் மழை பெய்துவரும் நிலையில், மக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் நகரில் படித்து வேலையில்லாமல் சிரமப்பட்டு வரும் இளைஞர்களுக்கு தனியார் துறையில் தகுந்த வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வருகின்ற 07/12/2024 தேதி மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளன. தொடர்ந்து இம்முகாமில் வேலை தேடும் ஆண்கள் பெண்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில்இன்று 02.12.2024-ம் தேதி இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள். மேலும் திண்டுக்கல் ஊரகம் திண்டுக்கல் நகர் ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் கொடைக்கானல் பழனி நிலக்கோட்டை உள்ளிட்ட திண்டுக்கல் தாலுகா பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு செல்லும் அதிகாரிகள் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கனமழை காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டுப்பாட்டு அறை எண்கள் மாவட்ட அளவில் 24 மணி நேரமும் செயல்படும் வண்ணம் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அலுவலகம் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் மாவட்ட திண்டுக்கல் கிழக்கு, மேற்கு, நிலக்கோட்டை, நத்தம், ஆத்தூர்பழனி, ஒட்டன்சத்திரம், வேடச்சந்தூர், குஜிலியம்பாறைகொடைக்கானல் சார் ஆட்சியர் பழனி வருவாய் கோட்டாட்சியர் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல், சிலுவத்தூர்ரோடு மேம்பாலத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து இன்று விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வங்கியில் இருந்து பேசுவதாக குறைந்த வட்டியில் உடனடியாக லோன் தருவதாக உங்கள் மொபைல் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என திண்டுக்கல் காவல்துறை சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.